SELANGOR

மேம்பாடு வேண்டுமா? பெரிக்கத்தானின் குழப்ப அரசியல் வேண்டுமா?  தெளிவாக முடிவெடுங்கள்- அமிருடின் வேண்டுகோள் 

11 ஆகஸ்ட் 2023, 12:48 PM
மேம்பாடு வேண்டுமா? பெரிக்கத்தானின் குழப்ப அரசியல் வேண்டுமா?  தெளிவாக முடிவெடுங்கள்- அமிருடின் வேண்டுகோள் 

ஷா ஆலம், ஆக 11- மாநிலத்திற்கு மேம்பாட்டைக் கொண்டு வரக்கூடிய மற்றும் நிலைத்தன்மையை தொடர்ந்து நீடிக்கக்கூடிய  கூட்டணியை தேர்ந்தெடுக்கும்படி நாளைய தேர்தலில் வாக்களிக்க இருக்கும் மாநில மக்களுக்கு மந்திரி புசார் அறைகூவல் விடுத்துள்ளார்.

சிலாங்கூர் மாநில ஒற்றுமை அரசாங்கம் கடந்த ஐந்தாண்டுகளில் சிறப்பான அடைவு நிலையைப் பதிவு செய்துள்ளது பல்வேறு சவால்களையும் வெற்றிகரமாக சமாளித்து உள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வெற்றியை, சிறப்பான அடைவு நிலையை மற்றும் மேம்பாட்டைத் தொடரக்கூடிய கூட்டணி வேண்டுமா? அல்லது நாட்டில் நிலைத்தன்மையற்ற சூழலை ஏற்படுத்துவதற்கு தேர்தலைப் பயன்படுத்துவதில் மட்டும் ஆர்வம் காட்டும் கூட்டணி வேண்டுமா? என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு உங்கள் கையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாம் நேசிக்கும் மாநிலத்தை மேம்படுத்துவதற்கான புதிய யோசனைகள், புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. நாம் நேசிக்கும் மாநிலத்தின் எதிர்காலம் கருதியும் நம் பிள்ளைகள் மற்றும் எதிர்காலத் தலைமுறையினரின் நலன் கருதியும் பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் வேட்பாளர்களுக்கு மறவாமல் வாக்களியுங்கள் என அவர் கேட்டுக் கொண்டார்.

இன்று காலை மாநில மக்களுக்கு ஆற்றிய முக்கிய உரையில் அமிருடின் இவ்வாறு கூறினார். அவரின் உரை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

நாளை நடைபெறவிருக்கும் ஆறு மாநிலத் தேர்தல்களிலும் பெரிக்காத்தான் நேஷனல் வென்றால் மத்திய அரசு வீழ்ச்சி காணும் என்ற தனது கருத்தைப் பாஸ் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.