SELANGOR

போலி பிரசுரங்கள் தொகுதி முழுவதும் விநியோகிக்கப்பட்டன - சுங்கை ரமால் தொகுதி

11 ஆகஸ்ட் 2023, 7:00 AM
போலி பிரசுரங்கள் தொகுதி முழுவதும் விநியோகிக்கப்பட்டன - சுங்கை ரமால் தொகுதி

பாங்கி, ஆகஸ்ட் 11: சுங்கை ரமால் வேட்பாளர் மஸ்வான் ஜோஹர் தொடர்பான போலி பிரசுரங்கள் நேற்று முதல் தொகுதி முழுவதும் விநியோகிக்கப்பட்டது குறித்து அமானா பாங்கி இளைஞர் மற்றும் அம்னோ பாங்கி இளைஞர் இயக்கம் காவல்துறையில் புகார் அளித்தன.

போலி துண்டுப்பிரசுரம் தனது கட்சியின் அசல் துண்டுப் பிரசுரத்துடன் கிட்டத்தட்ட ஒத்துபோகும் வகையில் இருந்தது. ஆனால் தீங்கிழைக்கும் மற்றும் அவதூறான உள்ளடக்கத்துடன் இருந்தது என்று மஸ்வான் கூறினார்.

"போலி துண்டுப்பிரசுரத்தின் வடிவமைப்பு அசல் துண்டுப் பிரசுரத்தைப் போலவே உள்ளது, ஆனால் உள்ளடக்கம் என்னை தவறாகச் சித்தரித்துள்ளது அதாவது என்னை ஒரு மோசமான நபராக, மோசமான ஆளுமையுடன் இருப்பதாகக் காட்டுகிறது,`` என்றார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.