SELANGOR

சமூக ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் – டெங்கில் தொகுதி

11 ஆகஸ்ட் 2023, 6:58 AM
சமூக ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் – டெங்கில் தொகுதி

சிப்பாங், ஆகஸ்ட் 11: பிரச்சாரக் காலத்திற்கு இன்னும் குறைந்த கால அவகாசமே உள்ள நிலையில், சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ் அப் செயலி மூலம் வாக்காளர்களை அணுகுவதற்கான பிரச்சாரத்தை டெங்கில் தொகுதி தீவிரப்படுத்துகிறது.

வாக்காளர்கள் தகவல்களைப் பெறுவதை உறுதி செய்யவும் இந்த சனிக்கிழமை வாக்களிக்க அவர்களை ஈர்க்கவும் பல்வேறு தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று டெங்கில் வேட்பாளர் நூராஸ்லி சைட் கூறினார்.

“டெங்கில் உள்ள மக்கள் என்னை நன்கு அறிந்திருந்தாலும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் அவர்கள் நம்பிக்கையுடன் இருப்பதை உறுதி செய்வதற்காகக் கடந்த சில நாட்களாக பிரச்சாரத்தைத் தீவிரப் படுத்தினோம்.

"மத்திய நிர்வாகத்திற்கு இணையாக மாநில நிர்வாகம் செயல்பட்டால், வளர்ச்சி மற்றும் வசதிகளை எளிதாகச் செயல்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்த, வாக்காளர்கள் இந்தப் பகுதி மக்களின் பிரதிநிதியாக எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும்," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

டெங்கில் தொகுதியில் இந்த சனிக்கிழமை குடியிருப்பாளர்கள் வாக்களிக்க வருவதற்குப் போக்குவரத்து வசதிகள் வழங்கப்படும் என்றார்.

“மேலும், 23 வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான தளவாடத் தேவைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

வாக்காளர்களை அந்தந்த வாக்குச் சாவடிகளுக்கு அழைத்துச் செல்ல மோட்டார் சைக்கிள்கள், கார்கள், வேன்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த சனிக்கிழமை மாநிலத் தேர்தலில் டெங்கில் தொகுதியில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.