SELANGOR

பெர்மாத்தாங் தொகுதி சுற்றுலாத் தலமாக மாற்றப்படும் -  சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர்

11 ஆகஸ்ட் 2023, 6:50 AM
பெர்மாத்தாங் தொகுதி சுற்றுலாத் தலமாக மாற்றப்படும் -  சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர்

கோலா சிலாங்கூர், ஆகஸ்ட் 11: சிலாங்கூரில் பெர்மாத்தாங் தொகுதியைச் சுற்றுலாத் தலமாக மாற்றுவேன் என்று சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

பெர்மாதாங்கில் உள்ள பல இடங்கள் சுற்றுலாப் பகுதிகளாக வளர்ச்சியடைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும், இதனால் உள்ளூர் சமூகத்தின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என்றும் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் கூறினார்.

நேற்று ரிவர் வியூ உணவகத்தில் சீனச் சமூகத்தினருடனான சந்திப்பில், "சுங்கை சிலாங்கூரின் அழகை படகு மூலம் பார்ப்பது, கடல் உணவு உணவகங்களை ஊக்குவித்தல் மற்றும் வேளாண் சுற்றுலாவை மேம்படுத்துதல் போன்ற பல இடங்களை சுவாரஸ்யமான சுற்றுலா தலங்களாக மாற்றலாம்" என்று கூறினார்.

பெர்மாதாங் தொகுதி வேட்பாளர் முகமட் யாஹ்யா மாட் சாஹ்ரிக்கு (பாக் யா) உதவ வந்திருந்த அவர், இப்பகுதியில் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்த சுற்றுலா வளர்ச்சியை செயல்படுத்த ஒற்றுமை அரசு வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.

“பெர்மாதாங் தொகுதியில் ஹராப்பான் வேட்பாளர் வெற்றி , மாநில அரசின் வெற்றியாகும் , அதன்வழி மத்திய அரசும் மாநில அரசுடன் இணைந்து இத்திட்டங்களை மேற்கொள்ள இயலும் என்றார். எனவே ஆகஸ்ட் 12-ம் தேதி மக்கள் பாக் யாவுக்கு வாக்களிக்க வேண்டும்,'' என்றார்.

இதற்கிடையில், பெர்மாதாங்கைச் சிலாங்கூரில் சுற்றுலாத் தலமாக மாற்றுவதில் ஒற்றுமை அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதாக பாக் யா கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.