SELANGOR

சிலாங்கூரை ஒற்றுமை அரசு வென்றால் திங்கள் கிழமை பொது விடுமுறை

11 ஆகஸ்ட் 2023, 6:39 AM
சிலாங்கூரை ஒற்றுமை அரசு வென்றால் திங்கள் கிழமை பொது விடுமுறை

ஷா ஆலம், ஆக 11- நாளை நடைபெவிருக்கும் மாநிலத் தேர்தலில்

சிலாங்கூர் மாநிலத்தில் ஒற்றுமை அரசாங்கம் மீண்டும் வெற்றி பெற்றால்

எதிர்வரும் திங்கள்கிழமை மாநிலத்திற்குச் சிறப்பு பொது விடுமுறை

வழங்கப்படும் என மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி

அறிவித்துள்ளார்.

இந்த தேர்தலில் ஒற்றுமை அரசாங்கம் வெற்றி பெற்று மாநில அரசை

அமைத்தால் வரும் ஆகஸ்டு 14ஆம் தேதி அதாவது திங்கள்கிழமை சிறப்பு

விடுமுறையை வழங்க நாங்கள் இணங்கியுள்ளோம் என்று அவர்

சொன்னார்.

இன்று காலை தனது பேஸ்புக் வாயிலாக மாநில மக்களுக்கு ஆற்றிய

முக்கிய உரையில் சிலாங்கூர் மாநில பக்கத்தான் ஹராப்பான்

கூட்டணியின் தலைவருமான அமிருடின் இதனைக் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.