SELANGOR

மாநிலத் தேர்தலில் செமினி தொகுதியில் வெற்றி பெற முடியும் – பிஎன் வேட்பாளர்

11 ஆகஸ்ட் 2023, 3:20 AM
மாநிலத் தேர்தலில் செமினி தொகுதியில் வெற்றி பெற முடியும் – பிஎன் வேட்பாளர்

உலு லங்காட், ஆகஸ்ட் 11: செமினி தொகுதியில் உள்ள  குடியிருப்பாளர்களின் ஆதரவை கண்டு பாரிசான் நேஷனல் (பிஎன்) வேட்பாளர், மாநிலத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

மேலும், நலன்புரி பணிகளை நிர்வகிப்பதில் தனக்கு அனுபவம் இருப்பதாக வான் சுலைக்கா அனுவா குறிப்பிட்டார்.

"இதுவரை, செமினியில் உள்ள பல்வேறு இனங்கள் எனக்கு நல்ல ஆதரவைக் கொடுத்ததை நான் காண்கிறேன்.  ஆகஸ்ட் 12 அன்று அவர்கள் அதை வாக்குகளாக மாற்றுவார்கள் என்று நம்புகிறேன்.

"சமூகத்துடன் பழகுவதில் எனக்கு அனுபவம் இருக்கிறது, ஏனென்றால் நான் நீண்ட காலமாக அதாவது அம்னோவின் பெண்கள் பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டலிருந்து சுறுசுறுப்பாக இயங்கி வருகிறேன்,`` என்று அவர் செமினியில் பிரச்சாரம் செய்யும் போது கூறினார்.

சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்கள் தன் மீது வைத்திருந்த நம்பிக்கை, மாநிலத்தில் ஒரு ஒற்றுமை அரசாங்கத்தை அமைப்பதற்கு செமினி தொகுதி ஒரு பங்களிப்பாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த தன்னை மேலும் உற்சாகப்படுத்தியது என்றும் சுலைக்கா கூறினார்.

பிரச்சாரம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் பிஎன் கூட்டணிக்கும் ஹராப்பானுக்கும் இடையிலான ஒத்துழைப்பைக் கண்டு வான் சுலைக்காவும் திருப்தி அடைந்தார்.

மாநிலத் தேர்தலில், செமினி தொகுதியில் வான் சுலைக்கா மற்றும் நூஷி மாவோட்ஸ் (பெரிக்கத்தான் நேஷனல்) இடையே இரு முனை போட்டி நிலவுகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.