SELANGOR

54 செகி ஃப்ரெஷ் கிளைகளில் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா அடிப்படைப் பொருட்களை வாங்கலாம்

10 ஆகஸ்ட் 2023, 8:01 AM
54 செகி ஃப்ரெஷ் கிளைகளில் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா அடிப்படைப் பொருட்களை வாங்கலாம்

கோலா சிலாங்கூர், ஆகஸ்ட் 10: பொதுமக்கள் மாநிலம் முழுவதும் உள்ள 54 செகி ஃப்ரெஷ் கிளைகளில் ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா (JER) அடிப்படைப் பொருட்களை வாங்கலாம்.

ஒவ்வொரு முறையும் இத்திட்டம் ஏற்பாடு செய்யப்படும் போது கிடைக்கும் நல்ல வரவேற்பு அக்குழுவுக்கும் செகி ஃப்ரெஷ் பல்பொருள் அங்காடிக்கும் இடையேயான ஒத்துழைப்பு ஊக்குவிக்கிறது என்று சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகக் குழுமத்தின் (PKPS) தலைமைச் செயல் அதிகாரியின் கூறினார்.

"ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா நடத்தப்படும் ஒவ்வொரு முறையும் பெறப்பட்ட நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் கோழி, முட்டை, அரிசி மற்றும் எண்ணெய் போன்ற பொருட்களை எளிதாகப் பெறுவதற்கு, பிகேபிஎஸ் இப்போது செகி ஃப்ரெஷ் உடன் ஒரு கூட்டாண்மையை நிறுவியுள்ளது.

"சிலாங்கூரில் மொத்தம் 54 செகி ஃப்ரெஷ் கிளைகள் இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மேலும், இந்த விற்பனைத் திட்டத்திற்காக ஒரு நாளைக்கு நான்கு கிளைகளை நாங்கள் ஒதுக்குவோம்" என்று டாக்டர் முகமட் கைரில் முகமட் ராஸி கூறினார்.

ஆகஸ்ட் 1 முதல் மலிவு விற்பனையை விரிவுபடுத்துவதற்காக முன்னணி சூப்பர் மார்க்கெட்டுடன் சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகக் குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) ஜூலை 25 அன்று கையெழுத்திட்டது.

இதில் விற்கப்படும் பொருட்களின் விலையும் தற்போதைய சந்தை விலையை விட 20 முதல் 30 சதவீதம் குறைவாக இருப்பதாக டாக்டர் முகமட் கைரில் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.