ஷா ஆலம், ஆகஸ்ட் 8: ஜூலை 31 அன்று பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேசனல் முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகள் ‘’ தவாரான் கித்தா சிலாங்கூர்’’, போர்ட் கிள்ளான் தொகுதியில் அஸ்மிசாம் ஜமான் ஹூரிக்கு வாக்காளர்களின் ஆதரவைப் பெருக்கியது.
ஒரு வார பிரச்சாரத்திற்குப் பிறகு 23,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பக்காத்தான் ஹராப்பானை ஆதரிக்கத் தயாராக இருப்பதாக அவர் நம்புகிறார்.
"ஜூலை 31 அன்று வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. மக்கள் அதை ஏற்றுக் கொண்டனர், அதுவே ஹராப்பானுக்கு வாக்களிக்கும் ஆதரவாளர்களின் அதிகரிப்புக்கு காரணம்" என்று அவர் ஆகஸ்ட் 4 அன்று கூறினார்.
வாக்களிக்கும் நாளுக்கு முன்னதாக நிலைமை ஒரு சாதகமான அறிகுறியைக் காட்டுகிறது என்று அஸ்மிசாம் விவரித்தார். இந்த மாநிலத் தேர்தலில் போர்ட் கிள்ளானில் மொத்தம் 51,907 வாக்காளர்கள் பதிவு செய்துள்ளனர்.
கடந்த பொதுத் தேர்தலில் நான்கு முனைப் போட்டியில் 6,422 வாக்குகள் அதிகம் பெற்று அஸ்மிசாம் ஜமான் ஹூரி வெற்றி பெற்றார்.
இந்த முறை, அவர் மும்முனைப் போட்டியில் வான் ஹஸ்ரினா வான் ஹாசன் (பெரிகாத்தான் நேஷனல்), சையத் அஹ்மத் புத்ரா (பார்ட்டி ராக்யாட் மலேசியா) ஆகியோரை சந்திக்கவுள்ளார்.








