ஷா ஆலம், ஆகஸ்ட் 8: சிலாங்கூரின் வளமான வாழ்வுக்கு உதவித் திட்டம் (பிங்காஸ்) என்பது மாநில அரசின் நிதியை மக்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான முயற்சிகளில் ஒன்றாகும்.
இதற்கு முன், காசிஹ் இபு ஸ்மார்ட் சிலாங்கூர் (KISS) மற்றும் காசிஹ் இபு துங்கால் (KISS-IT) மூலம் உதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு பங்கேற்பாளரும் மாதத்திற்கு RM200 அல்லது வருடத்திற்கு RM2,400 பெற்றனர். இருப்பினும், கோவிட்-19 தொற்று நோய்க்குப் பின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மாநிலத்தில் குறைந்த வருமானம் பெறும் குழுக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட குழுவின் புகார்களை உணர்ந்து, சிலாங்கூர் அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கைகொடுக்க முன்வந்தது.
2022 பட்ஜெட் மூலம் மாநில அரசு கிஸ் திட்டத்தின் மேம்பாடுதான் பிங்காஸ் திட்டம் என அறிவித்தது.
மாநில அரசின் திட்டம் குறைந்த பட்சம் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகளையாவது வழங்க உதவுகிறது.
இத்திட்டம் அதிக செலவினங்களை எதிர்கொள்ள மக்களுக்கு உதவுவதில் வெற்றியடைந்தது, தற்போது வரை தொடரப்பட்டு வருகிறது.
மக்கள், குறிப்பாக குறைந்த வருமானம் பெறுபவர்கள் சுமையை குறைக்கும் பிங்காஸ்சின் நன்மைகள்:
-
பிங்காஸ் உதவித் தொகை மாதத்திற்கு RM300 அல்லது வருடத்திற்கு RM3,600 ஆக அதிகரிப்பு
-
பயனாளிகளின் எண்ணிக்கை 21,000 லிருந்து 30,000 குடும்பங்களாக அதிகரித்துள்ளன
-
கைக் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை 180,000 சிலாங்கூர் குடிமக்கள் பயனடைகின்றனர்
-
2022 மற்றும் 2023 மாநிலப் பட்ஜெட்டில் RM108 மில்லியன் ஒதுக்கீடு
-
குறைந்த வருமானம் (B40) குழுக்களை இலக்காக கொண்டது.
-
பெறுநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் அரிசி, நூடுல்ஸ், முட்டை மற்றும் சமையல் எண்ணெய் போன்ற பொருட்களை வாங்கலாம்
-
பள்ளிக்குச் செல்லும் அல்லது சிறு குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள், டிஸ்போசபிள் டயாப்பர்கள், பால் மாவு, பள்ளிப் பொருட்கள் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை பிங்காஸ் அட்டையைப் பயன்படுத்தி வாங்கலாம்.
-
WavPay இ-வாலட்டைப் பயன்படுத்தி பணம் செலுத்துதல்
விண்ணப்பிக்க bingkasselangor.com என்ற இணையப்பக்கத்தை நாடவும்








