SELANGOR

நீண்ட காலத்துக்கு நாட்டை வழி நடத்த வலு கொண்டது  ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணி

8 ஆகஸ்ட் 2023, 12:17 PM
நீண்ட காலத்துக்கு நாட்டை வழி நடத்த வலு கொண்டது  ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணி

ஷா ஆலம், ஆகஸ்ட் 8: பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் ஆகிய இரு கட்சிகளின் கூட்டணி, நீண்ட காலத்திற்கு நாட்டை ஆளும் வலு கொண்ட  கூட்டணி.

செயல் திறனின் அடிப்படையில் அக்கூட்டணி மாநில மற்றும் தேசிய பொருளாதாரத்தை உயர்த்தும் திறன் கொண்டவை என்று நம்புகிறேன் என டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

" நாடு இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு நிலையான நிர்வாகத்தில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது கூட்டணியின் ஸ்திரத்தன்மைக்கான ஒரு செய்முறை என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் மற்றும் முன்னாள் அம்னோ தகவல் தலைவர் ஷஹரில் ஹம்டான் ஆகியோரால் நடத்தப்பட்ட இந் நிகழ்ச்சி, அரசியல் பிரச்சனைகள் மற்றும் நடப்பு விவகாரங்களை உள்ளடக்கியது.

ஒருங்கிணைந்த செய்முறையானது ஹரப்பானைப் பலவீனப் படுத்துமா என்ற கேள்விக்குக் கருத்து தெரிவித்த அமிருடின், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக இதனைப் பராமரிக்க வேண்டும் என்று ஒப்புக்கொண்டார்.

இதற்கிடையில், இந்த சனிக்கிழமை 56 தொகுதியில் நடைபெறும் மாநிலத் தேர்தலில் ஹராப்பான்-பிஎன் 38 அல்லது 39 இடங்களில் வெற்றி பெற முடியும் என்று அமிருடின் நம்பிக்கை தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.