SELANGOR

சிலாங்கூரில் மலாய்க்காரர்களின் நிலை பாதுகாக்கப்படும்

8 ஆகஸ்ட் 2023, 11:08 AM
சிலாங்கூரில் மலாய்க்காரர்களின் நிலை பாதுகாக்கப்படும்

பந்திங், ஆகஸ்ட் 8: பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் ஆகிய கட்சிகள் மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) வெற்றி பெற்றால் சிலாங்கூரில் மலாய்க்காரர்களின் நிலை பாதுகாக்கப்படும்.

சிலாங்கூரில் ஹராப்பான்-பிஎன் நீடித்தால் நிர்வாகத்தில் டிஏபி ஆதிக்கம் செலுத்தும் என்ற உணர்வுடன் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே வாக்காளர்களை பயமுறுத்துவதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மலாய்க்காரர்களை பயமுறுத்துவதற்காக எதிர்க்கட்சியினர் எங்கள் நண்பரான டிஏபி யை தாக்குவது மட்டுமே அவர்களுக்கு உள்ள ஒரே வழி. ஆக்ககரமான எதிர்கட்சியாக இருந்தால் நாட்டின் பொருளாதார விவகாரத்துக்கும், மற்ற பிரச்சனைகளுக்கும் மாற்று கருத்துக்களை முன் வைத்து அரசியல் நடத்தலாம் . ஆனால் அரசியலில் திவாலானவர்கள் மட்டுமே இன உணர்வுகளை தூண்டி ஓட்டு சேகரிக்க வேண்டும் என்றார் அவர் . ஆனால் வாக்காளர்கள்,   மலாய்க்காரர்களின் குரல் நம்பிக்கையுடன் உறுதியாக ஒலிக்க  ஹரப்பான்-பிஎன் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்.

"ஏனெனில் எங்கள் ஒற்றுமை வலுவாக இருக்கும், அது பல தசாப்தங்களாக நீடிக்கும், "என்று அவர் நேற்று இரவு ஆற்றிய உரையில் கூறினார்.

இனம் மற்றும் மதம் தொடர்பான பிரச்சனைகளை தொடர்ந்து எழுப்பினால், எதிர்க்கட்சிகள் என்றென்றும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கும் என்று சிலாங்கூர் ஹராப்பான் தலைவரான அமிருடின் கூறினார்.

"நீங்கள் மிக குறுகிய '' இனவாத '' வட்டத்துக்குள் இருக்க விரும்புவதால் , என்றும் எதிர்க் கட்சியாகவே இருப்பீர்கள், உங்கள்  குரல் மலாய்க்காரர்களின் துயரத்தை தீர்க்காது  ஹராப்பான்-பிஎன் இணைந்து திட்டங்களை வலுப்படுத்தவும், மாநிலம் மற்றும் தேசத்தின் வெற்றிக்காகத் தொடர்ந்து போராடும்" என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.