கோலா சிலாங்கூர், ஆகஸ்ட் 8: ஹாமிடி அப்துல் மானன் அல்லது செகு அமிடி என்று அழைக்கப்படும் ஈஜோக் தொகுதி வேட்பாளர், மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) வெற்றி பெற்றால் இளைஞர்களுக்கு அதிக வசதிகள் உருவாக்க எண்ணம் கொண்டுள்ளார்.
அவை ஃபுட்சல் கோர்ட், மண்டபம் மற்றும் பொழுதுபோக்கு பூங்கா ஆகியவை ஆகும் என ஹாமிடி அப்துல் மானன் தெரிவித்தார்.
"இரவு நேரங்களில் விளையாடுவதற்கு ஃபுட்சல் மைதானத்தை விரும்பும் இளைஞர்களிடம் இருந்து பல கோரிக்கைகள் வந்துள்ளது. இந்த கோரிக்கையை நாங்கள் நிறைவேற்ற முயற்சிப்போம் என்று அவர் பிரச்சாரத்தின் போது கூறினார்.
"மேலும், ஈஜோக் மக்கள் பல்வேறு விளையாட்டு மற்றும் ஓய்வு நேர செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக பல்நோக்கு மண்டபம் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்," என்று கோலா சிலாங்கூர் மாவட்ட லீக் சமூக விளையாட்டு நிகழ்ச்சியில் சந்தித்தபோது கூறினார்.
மாநிலத் தேர்தலில், ஜெஃப்ரி மேஜான் (பெரிகாத்தான் நேஷனல்) மற்றும் தான் கேட் கியோங் (பேபாஸ்) ஆகியோருக்கு எதிராக ஹாமிடி முக்கோண போட்டியை எதிர்கொள்கிறார்.








