SELANGOR

பாரிசான் நேஷனல் வேட்பாளருக்கு வாக்காளர்கள் ஆதரவு - சுங்கை பூரோங் தொகுதி

8 ஆகஸ்ட் 2023, 2:42 AM
பாரிசான் நேஷனல் வேட்பாளருக்கு வாக்காளர்கள் ஆதரவு - சுங்கை பூரோங் தொகுதி

தஞ்சோங் காராங், ஆகஸ்ட் 8: தேர்தல் பிரச்சாரத்தின் முதல் வாரம் முழுவதும் வாக்காளர்களிடம் இருந்து கிடைத்த நல்ல வரவேற்பின் அடிப்படையில் சுங்கை பூரோங் தொகுதியின் பாரிசான் நேஷனல் (பிஎன்) வேட்பாளர் முகமது கிர் ராம்லி வெற்றி பெறுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதற்குப் பிறகு, பிரச்சாரத்தை இரட்டிப்பாக்க எண்ணம் கொண்டுள்ளார். அவர் அதிகக் காலம் அரசியலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் அவரை அறிவார்கள் என்று விளக்கினார்.

"அதுமட்டுமின்றி, நான் சமய அலுவலகத்தில் சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றி இருப்பதும் மக்கள் என்னை அடையாளம் காண உதவும்" என்று தஞ்சோங் கராங் பிரிவின் அம்னோ துணைத் தலைவர் நேற்று கூறினார்.

அவர் 1990 முதல் 1999 வரை நான்கு தேசிய பள்ளிகளில் மதக் கல்வியை கற்பித்தார், மேலும் 2008 வரை மாநிலத்தின் மத அலுவலகத்தில் பணியாற்றினார்.

மாநிலத் தேர்தலில், முகமது கிர் ராம்லி, டாக்டர் முகமது ஜம்ரி மாண்டோப்பை (பெரிகாத்தான் நேஷனல்) எதிர்த்து போட்டியிடுகிறார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.