SELANGOR

இளைஞர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய விளையாட்டு வசதிகள் மேம்படுத்தப் படும் - பெர்மாதாங் தொகுதி

7 ஆகஸ்ட் 2023, 11:50 AM
இளைஞர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய விளையாட்டு வசதிகள் மேம்படுத்தப் படும்  - பெர்மாதாங் தொகுதி

தஞ்சோங் கராங், ஆகஸ்ட் 7: பெர்மாதாங் தொகுதியில் இளைஞர்களின் தேவைகளைப்

பூர்த்தி செய்யும் வகையில் விளையாட்டு மற்றும் ஓய்வு வசதிகள் மேம்படுத்தப்படும்.

விளையாட்டின் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வளர்ப்பதற்காக

அரங்குகள், மைதானங்கள் மற்றும் திடல்கள் ஆகியவை மேம்படுத்துதல் நடவடிக்கை

மேற்கொள்ளப்படும் என்று வேட்பாளர் முகமட் யஹ்யா மட் சாஹ்ரி கூறினார்.

" பெர்மாதாங் தொகுதி உட்பட வடக்கு சிலாங்கூர் பல விளையாட்டு நட்சத்திரங்களை

உருவாக்கியது. உதாரணத்திற்கு, கம்போங் பரிட் செரோங்கைச் சேர்ந்த அம்ரி யாஹ்யா

மற்றும் ஈஜோக்கைச் சேர்ந்த சஃபிக் ரஹீம் ஆகியோர் ஆகும்.

"இத்தொகுதியில் புதிய நட்சத்திரங்களை உருவாக்கும் திறன் கொண்ட விளையாட்டு

வசதிகள் உள்ளன," என்று அவர் இன்று பக்காத்தான் ஹராப்பானின் பிரதான

செயல்பாட்டு அறையில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

மேலும், ``ஒரு கிராமம், ஒரு தயாரிப்பு`` என்ற திட்டத்தை உருவாக்குவதன் மூலம்

குடியிருப்பாளர்களின் பொருளாதாரத்தையும் ஊக்குவிக்க முகமட் யாஹ்யா விரும்பினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.