SELANGOR

புறவழிச்சாலைகளின் கட்டுமானம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்

7 ஆகஸ்ட் 2023, 9:53 AM
புறவழிச்சாலைகளின் கட்டுமானம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்

சுங்கை பிலேக், ஆகஸ்ட் 7: சுங்கை பிலேக் தொகுதியில் உள்ள பல பகுதிகளில் மேற்கொள்ளப்படும் புறவழிச் சாலைகளின் கட்டுமானம், காலையிலும் மாலையிலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க உதவும்.

சில பகுதிகளில் வழக்கத்திற்கு மாறான நெரிசல் இருப்பதாகவும், மக்கள் நடமாடுவது கடினமாக இருப்பதாகவும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் வீ கியான் கியோங் கூறினார்.

அதன் காரணமாக, தான் அவ்விடத்தை ஆய்வு செய்துள்ளதாகவும், சாலை நெரிசலை தவிர்க்க அந்த பகுதியில் உள்ள சாத்தியக் கூறுகளைப் ஆய்ந்து வழங்கப்பட்ட தேர்தல் அறிக்கை சிறந்த ஒன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"உதாரணமாக, B 48 சந்திப்பில் சாலையை மேம்படுத்த, பொறியாளரின் கருத்தைப் பெற்ற பிறகு, அதை இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க முடியும் என்பது தெரிய வந்தது.

"மற்ற பிரகடனங்களில் உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்துதல், சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல் மற்றும் பொதுச் சந்தைகளை செயல்படுத்துதல் ஆகியவை அடங்கும்" என்று அவர் தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடும் போது கூறினார்.

இத்தொகுதியில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் உள்ள அவர், அப்பகுதி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

இன்னும் சில நாட்களே உள்ளன, பொதுமக்கள் தன்னை ஏற்றுக் கொண்டு வாக்களிக்க , நான் கடுமையாக உழைக்க வேண்டும், இங்குள்ள மக்களின் பிரதிநிதி என்ற பொறுப்பை என்றார்.

மாநிலத் தேர்தலில், சுங்கை பிலேக் தொகுதியில்  கியான் கியோங், டத்தோ சுஹைமி முகமது கசாலி (பெரித்தான் நேஷனல்) மற்றும் நாகேஸ்வரன் ரவி ஆகியோருக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.