உலு சிலாங்கூர், ஆகஸ்ட் 7: இரண்டாம் தலைமுறையினர் சொந்த வீடு வாங்குவதில் உள்ள சிரமத்தை குறைக்க பாரம்பரிய கிராமத்தில் உள்ள மாநில அரசின் நிலத்தை, வீட்டு தளங்களாக மாற்றுவதற்கு குறித்து முகமட் அம்ரான் சாகீர் எண்ணம் கொண்டுள்ளார்.
இரண்டாவது தலைமுறையினர் குறைந்த விலையில் சொந்த வீடு வாங்குவதற்கான வாய்ப்பை இது வழங்குகிறது என்று உலு பெர்ணம் வேட்பாளர் கூறினார்.
"இரண்டாம் தலைமுறைக்கு மாற்று வீடுகள் வழங்குவதே எனது குறிக்கோள். உலு பெர்ணமில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து பாரம்பரிய கிராமங்களிலும் மாநில அரசு நிலம் உள்ளது.
"வீட்டுப் பகுதியை வழங்குவதை விட குடியிருப்பாளர்களுக்குச் சொந்தமான ஒரு வீட்டுத் தளத்தை வழங்க நான் திட்டமிட்டுள்ளேன், காரணம் இது மலிவானதாக இருக்கும்," என்று அவர் சிலாங்கூர் மீடியாவிடம் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநிலத் தேர்தலில் உலு பெர்ணம் தொகுதியில் வெற்றி பெற்றால் அவர் கவனம் செலுத்தும் விஷயங்களில் இதுவும் ஒன்றாகும்.
உலு பெர்ணம் தொகுதியில் முகமட் அம்ரானுக்கும், பெரிகாத்தான் நேஷனல் வேட்பாளர் முயிஸ்ஸுடின் மஹ்யுடினுக்கும் இடையே போட்டி நிலவுகிறது.








