கிள்ளான், ஆகஸ்ட் 7: கம்போங் புக்கிட் நாகாவைச் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட சாலைகள் ஐந்து ஆண்டுகளில் மேம்படுத்தப்பட்டுள்ளன என்று பக்காத்தான் ஹராப்பான் சுங்கை காண்டீஸ் வேட்பாளர் முகமட் ஜவாவி அகமது முக்னி கூறினார்.
லோரோங் சியாஸ்வான், லோரோங் ஹாஜி தவில், லோரோங் தாகியா, லோரோங் ஹாஜி காசிம் மற்றும் லோரோங் ஹாஜி வஹாப் ஆகிய ஆறு சாலைகளின் மேம்பாட்டு பணி கடந்த வாரம் நிறைவடைந்ததாக பொறுப்பாளர் விளக்கினார்.
சுமார் RM200,000 செலவில் மாநில நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட இன்ஃப்ராசெல் நிறுவனத்தால் இந்த மேம்பாடு பணி செயல்படுத்தப்பட்டது என்று மாநிலப் பொறுப்பு உறுப்பினராக இருக்கும் அவர் மேலும் கூறினார்.
சாலை மேம்பாட்டு பணியை ஆய்வு செய்த பின், ""குடியிருப்பு மக்களின் அடிப்படை வசதிகளை, எப்போதும் சரிபார்த்து வருகிறோம். இதற்கு முன், சாலை குண்டும் குழியுமாக இருந்ததால், விபத்து ஏற்படும் அபாயம் அதிகமாக இருந்தது.
மாநில நிர்வாகம் எல்இடி விளக்குகள் அல்லது சோலார் விளக்குகளை பொருத்த முயற்சிக்கிறது, குறிப்பாக இருண்ட சாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக என்று என்று முகமட் ஜவாவி கூறினார்.
மே 13 அன்று, மாநிலம் முழுவதும் உள்ள கிராமச் சாலைகளை சீரமைக்க சிலாங்கூர் கிராமப்புற மற்றும் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்திடம் இருந்து 2 மில்லியன் ரிங்கிட் கூடுதலாக ஒதுக்க பட்டதாகவும் அமிருடின் அறிவித்தார்.
2021 முதல் கடந்த ஆண்டு வரை 39,000க்கும் மேற்பட்ட சாலை பணிகள் இன்ஃப்ராசெல் மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் அளித்த புகார் பேரில் 24 மணி நேரத்தில் அனைத்து சாலைகளும் சரி செய்யப்பட்டது.








