SELANGOR

மாநில நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களும் தொடரும் – மந்திரி புசார்

7 ஆகஸ்ட் 2023, 4:42 AM
மாநில நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களும் தொடரும் – மந்திரி புசார்

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 7: சிலாங்கூர் மக்கள், பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேசனல் (பிஎன்) ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து மாநில வருவாயைப் பகிர்ந்தளிக்க அனுமதிக்க வேண்டும்.

தற்போது உள்ள மாநில நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் அனைத்து திட்டங்களும் தொடரும் என்றும், இனிமேல் மக்கள் அதிக பலன்களை அனுபவிப்பார்கள் என்றும் டத்தோ மந்திரி புசார் கூறினார்.

"மாநிலத்தின் பொருளாதார வெற்றி மற்றும் முன்னேற்றத்தை நாம் நீட்டிக்கவும், தொடரவும் முடியும். இது நாட்டை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையாகும், அதனால், ஒற்றுமையாக இருக்க வேண்டும்,`` என்றார்.

நேற்றிரவு தாமான் மேடான் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய ஹராப்பான் சிலாங்கூர் தலைவர், மக்களின் நலனை உறுதி செய்ய தற்போது உள்ள முன்னேற்றம் மேம்படுத்தப்படும் என்றார்.

"வழங்கப்படும் திட்டங்கள் தொடரும். நாங்கள் தேவையான இடங்களில் அவற்றை மேம்படுத்தி மக்கள் பயன் பெறுவதை உறுதி செய்வோம்" என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த திங்கட்கிழமை, தற்போதுள்ள முன்னேற்றத்தைத் தொடர பல முக்கியமான துறைகளை உள்ளடக்கிய தவாரான் கித்தா சிலாங்கூரைச் சுங்கை துவா வேட்பாளரான அமிருடின் தொடங்கினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.