SELANGOR

ஒற்றுமை உரையில் 1,500க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பங்கேற்பு - உலு கிள்ளாங் தொகுதி

7 ஆகஸ்ட் 2023, 2:34 AM
ஒற்றுமை உரையில் 1,500க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பங்கேற்பு - உலு கிள்ளாங் தொகுதி

அம்பாங் ஜெயா, ஆகஸ்ட் 7: நேற்று இரவு உலு கிள்ளாங் தொகுதியில் தாமான் பெர்மாத்தா கால்பந்து மைதானத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் நடைபெற்ற ஒற்றுமை உரையில் 1,500க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா யோவின் உரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதைத் தொடர்ந்து தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் உரையாற்றினார். பின் உலு கிள்ளாங் வேட்பாளர் ஜுவைரியா சுல்கிப்லி இடி முழக்கத்துடன் வரவேற்கப்பட்டார்.

இந்நிகழ்விற்கு இரவு 11 மணி அளவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் வருகை புரிந்தார்.

இதில் அமீர் ஜஹாரி மற்றும் ஹத்தான் போன்ற உள்ளூர் கலைஞர்களும் பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

மேலும், இந்நிகழ்வில் புக்கிட் லஞ்சன் வேட்பாளர் புவா பெய் லிங், அம்னோ உச்ச செயற்குழு உறுப்பினர் டத்தோ லோக்மான் ஆடம் மற்றும் அமானா நெகாரா கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் ஹட்டா ரம்லி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.