ஷா ஆலம், ஆகஸ்ட் 7: ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா (JER) விற்பனைத் திட்டத்தால் இதுவரை மொத்தம் 4.4 மில்லியன் சிலாங்கூர் மக்கள் பயனடைந்துள்ளனர் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.
இந்த திட்டத்திற்காக மாநில அரசு மொத்தம் 23 மில்லியன் ரிங்கிட் மானியம் செலவிட்டதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
“இதுவரை இத்திட்டத்திற்காக மாநில அரசு 23 மில்லியன் ரிங்கிட் செலவழித்துள்ளது.
"சிலாங்கூரில் மொத்தம் 4.4 மில்லியன் மக்கள் இந்த ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா திட்டத்தால் பயனடைந்துள்ளனர்" என்று அவர் முகநூல் மூலம் தெரிவித்தார்.
அடுத்த மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) வெற்றி பெற்றால் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று சுங்கை துவா தொகுதி வேட்பாளர் அமிருடின் கூறினார்.
"தேர்தலில் வெற்றி பெற்றால், சிலாங்கூர் மாநிலத்தில் அதிக மக்கள் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவோம். சிலாங்கூரின் ஸ்திரத்தன்மை மற்றும் செழுமைக்காக ஒற்றுமை கூட்டணியைத் தேர்ந்தெடுங்கள்" என்று அவர் கூறினார்.
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.








