கோலா லங்காட், ஆகஸ்ட் 6: 2018 ஆம் ஆண்டு முதல் போர்ஹான் அமன் ஷா, மக்களுக்கு சேவை ஆற்றுவதில் சிறப்பாக செயல் பட்டதன் அடிப்படையில், தற்போதைய மாநிலத் தேர்தலில் அவர் வெற்றி பெறுவார் என்று தஞ்சோங் சிப்பாட் தொகுதி வாக்காளர்கள் நம்புகின்றனர்.
எப்போதும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட போர்ஹான் அமன் ஷாவின் அணுகுமுறை அவரை வெற்றியடையச் செய்யும் என 42 வயதான நோரைசா முகமட் டாருஸ் கூறினார்.
“இதற்கு முன் பல்கலைக்கழகத்தில் எனது பிள்ளைகள் பயன்படுத்துவதற்கு மடிக்கணினி உதவி கேட்டேன், அது மிகக் குறுகிய காலத்தில் வழங்கப்பட்டது,``.
"இந்த சவாலான பொருளாதார சூழ்நிலையில் அனைவராலும் மடிக்கணினி வாங்க முடியாது, YB போர்ஹானின் அலுவலகம் அதற்கு ஒப்புதல் அளித்ததால் நான் எனது நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்," என்று அவர் கூறினார்.
மேலும், போர்ஹானின் நட்பு பண்பு, எளிதாக அணுகக்கூடிய குணம் மற்றும் உள்ளூர்வாசிகளின் தேவைகளை உணரும் தன்மையால் அவரை மதிப்பதாக 38 வயதான சித்தி சுரயா சலே கூறினார்.
"அவர் நல்ல திட்டங்களை கொண்ட ஒரு தலைவர் மற்றும் மக்களின் தேவைகளைப் பற்றி அடிக்கடி சிந்திக்கிறார். உதாரணமாக, அவர் தஞ்சோங் சிப்பாட் தொகுதிக்கு ஓர் ஆம்புலன்ஸ் சேவையை உருவாக்கினார், இது குடியிருப்பாளர்கள் மருத்துவமனைக்குச் சென்று வர உதவுகிறது.
இங்கு நடைபெறும் சமூகப் பணிகளிலும் தீவிரமாகப் பங்கேற்பார். அவர் இத்தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகத் தொடர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என்றார் சித்தி சுரயா மேலும் கருத்து தெரிவித்தார்.
கடந்த பொதுத் தேர்தலில், கரீம் மன்சோர் (பாரிசன் நேஷனல்) மற்றும் முகமட் ஹஸ்லின் ஹாசன் (பாஸ்) ஆகியோரை தோற்கடித்து 9,828 வாக்குகள் பெரும்பான்மையுடன் தஞ்சோங் சிப்பாட் தொகுதியில் போர்ஹான் வெற்றி பெற்றார்.
எதிர்வரும் மாநிலத் தேர்தலில், தஞ்சோங் சிப்பாட் தொகுதியில்
சபிரின் மார்சோனோ (பெரிகாத்தான் நேஷனல்) மற்றும் போர்ஹான் (ஹராப்பான்) இடையே இருமுனைப் போட்டி நிலவுகிறது.








