SELANGOR

தவாரான் கித்தா சிலாங்கூர் மூலம் மாநில பொருளாதாரம் மேலும் வலுப்படும்

6 ஆகஸ்ட் 2023, 6:34 AM
தவாரான் கித்தா சிலாங்கூர் மூலம் மாநில பொருளாதாரம் மேலும் வலுப்படும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 6: தவாரான் கித்தா சிலாங்கூர் திட்டத்தில் உள்ள வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கு ரயில் இணைப்புகள் அமைப்பது மாநிலத்தின் பொருளாதாரத் துறையை மேலும் வலுப்படுத்தும்.

போக்குவரத்து மூலம், கிள்ளான் எல்லையில் உள்ள சொத்து மதிப்பு உயர்வதுடன், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு, பொருளாதாரத்தை இயக்கவும் முடியும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

"சிப்பாங், சபாக் பெர்ணம் மற்றும் கிள்ளான் நதி வரம்பில் புதிய நகரங்களை உருவாக்கும் திட்டங்களும் சிறந்த பொருளாதார வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் அளிக்கின்றன. இது எம்பிஐ மற்றும் பி.கே.என்.எஸ் ஆல் உருவாக்கப்படவுள்ள தெற்கு சிலாங்கூர் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பகுதியின் (IDRISS) விரிவாக்கமாகும்.

"நாங்கள் TVET ஐயும் ஊக்குவிக்கிறோம். இதற்குப் பிறகு நாங்கள் மூன்றாம் நிலைக் கல்விக்கான சிறந்த மையத்தைத் திறக்க விரும்புகிறோம். மேலும் திறமையான பணியாளர்களை ஒழுங்கமைக்கவும் உருவாக்கவும் மேல்நிலைப் பள்ளிகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

"இது மாநிலத்தை மேம்படுத்தி முன்னேற்றுவதற்கான சிறப்புத் திட்டங்களில் ஒன்றாகும்" என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் தினத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பின்னர் கூறினார்.

இங்குள்ள ராஜா மூடா மூசா மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ்யும் கலந்து கொண்டார்.

திங்களன்று, மாநில ஹராப்பான் தலைவரான அமிருடின், தற்போதுள்ள முன்னேற்றத்தைத் தொடர பல முக்கிய துறைகளை உள்ளடக்கிய தவாரான் கித்தா சிலாங்கூரைத் தொடங்கினார்.

முதல் சிலாங்கூர் திட்டத்தில் (RS-1) பல நடவடிக்கைகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து கோர்வைளைக் கொண்ட உள்ளடக்கத்தின் ஒரு பகுதி டத்தோ மந்திரி புசார் நிர்வாகத்தால் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.