SELANGOR

பூர்வீகக் குடியினர் குடியிருப்பு பொது வசதிகள் மேம்படுத்தப் படும் – செமினி தொகுதி

4 ஆகஸ்ட் 2023, 2:34 PM
பூர்வீகக் குடியினர் குடியிருப்பு பொது வசதிகள் மேம்படுத்தப் படும் – செமினி தொகுதி

செமினி, ஆகஸ்ட் 4: மாநிலத் தேர்தலில் செமினி தொகுதியில் பாரிசான் நேஷனல் (BN) வேட்பாளர் வெற்றி பெற்றால், பூர்வீகக் குடியினர் கிராமங்களில்  பொது வசதிகளை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளார்.

அவர்களின் வசதிகளை மேம்படுத்துவதோடு, பூர்வீகக் குடியினர் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர்களை நியமிப்பது டன் கணினி மையத்தையும் உருவாக்குவதாக வான் சுலைக்கா அனுவா கூறினார்.

"பூர்வீகக் குடியினர் கல்வியில் பின் தங்காமல் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறேன். அதனால், நான் ஒரு பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர்களின் சமூகத்திற்கான தொழில் திட்டமிடலின் ஈடுபடுவேன்.

" எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். செமினி தொகுதி மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவேன் என்று நான் உறுதியளிக்கிறேன்" என்று 49 வயதான வேட்பாளர் கூறினார்.

மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் பெரிகாத்தான் நேஷனல் (PN) பிரதிநிதி நுஷி மஹ்ஃபோட்ஸை எதிர்த்து போட்டியிடுகிறார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.