அம்பாங், ஆக 4- பக்காத்தான் ஹராப்பான் (ஹரப்பான்) மற்றும் பாரிசான் நேஷனல்
(தேசிய முன்னணி) கூட்டணி அரசாங்கம் இப்போது வலுவானதாகவும்,
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் மற்றும் நாட்டை மேம்படுத்தும் திறன்
கொண்டதாகவும் விளங்குகிறது.
மலேசியாவின் மிகவும் முன்னேறிய மாநிலமாக சிலாங்கூரை உருவாக்க பாரிசான்
நேஷனல் பெரிதும் உதவியது என்பதை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
மறுக்கவில்லை.
அரசாங்கத்தில் (தற்போது) வலுவான கூட்டணிகளில் ஒன்று. சிலாங்கூரை
மலேசியாவின் மிகவும் முன்னேறிய மாநிலமாக மாற்றியது அம்னோவும் பாரிசான்
நேஷனலும்தான் என்பதை நான் ஒருபோதும் மறுக்கவில்லை அமிருடின் சொன்னார்.
கடந்த 2008 முதல் நாங்கள் அந்த மரபைத் தொடர்ந்தோம். வித்தியாசம் உள்ளதா?
உள்ளது. வாக்குவாதம் உள்ளதா? உள்ளது. வேறுபாடுகள் இருந்தபோதிலும்
பாரிசான் கடந்த காலத்தில் சாதித்ததைப் போல சிலாங்கூர் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்களிப்பாளராக உள்ளது என்று அவர் கூறினார்.
நேற்றிரவு இங்கு ஜெலாஜா மடாணி பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஹராப்பான் சிலாங்கூர்
தலைவருமான அமிருடின், அரசாங்கத்தின் ஒற்றுமை கொள்கை நாட்டின் எதிர்காலத்தை
பிரகாசமாகவும், வளமாகவும், அமைதியாகவும் மாற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தற்போதைய கொள்கையைப் பின்பற்றி நாம் மேலும் முன்னோக்கிச் சென்றால்,
உண்மையான எதிர்காலத்தைக் காண முடியும். அனைத்து இனங்களையும்
உள்ளடக்கிய இக்கூட்டணி நாட்டைக் காப்பாற்ற பாடுபடுகிறது என்றார் அவர். எதிர்வரும் 12ஆம் தேதி நடைபெறும் மாநிலத் தேர்தலில் சுங்கை துவா தொகுதியில்
களம் காணும் அமிருடின், பெரிகாத்தான் நேஷனல் வேட்பாளர் முகமது ஹனிப்
ஜமாலுடின் மற்றும் சுமன் கோபால் (சுயேச்சை) ஆகியோரிடமிருந்து போட்டியை
எதிர்நோக்குகிறார்.








