SELANGOR

சிலாங்கூர் மக்களுக்குப் பலனளிக்கும் பல திட்டங்கள்

4 ஆகஸ்ட் 2023, 8:29 AM
சிலாங்கூர் மக்களுக்குப் பலனளிக்கும் பல திட்டங்கள்

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 4: சிலாங்கூர் மாநில நிர்வாகம் கூட்டாட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டால், மேலும் சிலாங்கூர் மக்களுக்குப் பலனளிக்கும் பல திட்டங்கள் உருவாக்கப்படும்.

அனைத்துத் திட்டங்களையும் விரைவாகச் செயல்படுத்துவது உட்பட, மக்களின் வாழ்க்கையும் மிகவும் வசதியாக அமையும் என உறுதி செய்வதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.

உதாரணத்திற்கு, சிலாங்கூர் இலவசப் பிரத்தியேக வகுப்பு 2009 இல் தொடங்கப் பட்டபோது 6,000 மாணவர்கள் மட்டுமே பயனடைந்ததாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கினார்.

"அத்திட்டம் உருவாக்கப்பட்டபோது, மாநில அரசுடன் நமக்கு  உறவு அணுக்கமாக இல்லை. . அந்த நேரத்தில் நாங்கள் கற்பிக்கத் தயாராக இருந்த ஆசிரியர்களை நியமித்தோம்.

பின், 2018ம் ஆண்டு மாநில கல்வி அமைச்சர் மற்றும் இயக்குனரை சந்தித்து; ஆலோசித்தேன். பிறகு அத்திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டது அதாவது  ஆசிரியர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது,'' என்றார்.

இதுவரை மொத்தம் 63,000 மாணவர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு வசதியான கற்றல் சூழ்நிலையை உருவாக்க மதிய உணவும் வழங்கப்படுகிறது.

"கூட்டாட்சி மற்றும் மாநில மட்டங்களுக்கு இடையில் நாம் ஒன்றிணைந்து இணக்கமாக இருக்கும்போது, பல்வேறு விஷயங்களையும் திட்டங்களையும் செயல்படுத்த முடியும்," என்று அவர் மேலும் கூறினார்.

கோவிட்-19 தொற்றுநோயால் நாடு பாதிக்கப்பட்டபோது மாணவர்களுக்கு உதவுவதற்காக இந்த திட்டம் இணையம் வழி அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு, இந்த திட்டத்தை வெற்றியடைய செய்வதன் மூலம் http://ePTRS.my போர்ட்டலை வலுப்படுத்தவும், ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தவும் RM7 மில்லியன் ஒதுக்கப்பட்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.