உலு கிளாங், ஆக 4- இன ரீதியாக பிளவுகளை ஏற்படுத்துவதை
நோக்கமாகக் கொண்ட அரசியல் பிரசாரங்களை நிராகரிக்கும்படி உலு
கிளாங் தொகுதியைச் சேர்ந்த பல்லின மக்கள் கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளனர்.
மாநிலத்தின் அமைதிக்கும் சுபிட்சத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்
என்பதால் இத்தகையச் செயல்களை ஒருபோதும் ஏற்க முடியாது என்று
உலு கிளாங் தொகுதி ஹராப்பான் வேட்பாளர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி
கூறினார்.
நாம் பல்லின மக்களுடன் வாழ்ந்து வருகிறம். உலு கிளாங் தொகுதியில்
குறிப்பாக தாமான் மெலாவத்தியில் பல்லின மக்கள் அமைதியாகவும்,
நல்லிணக்கத்தோடும் ஒன்றுபட்டும் வாழ்ந்து வருகின்றனர் என்று அவர்
சொன்னார்.
தாமான் மெலாவத்தியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது
அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த கூட்டத்தில் கோல சிலாங்கூர்
நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது மற்றும்
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான்
ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதனிடையே, மற்றொரு பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜூய்ரியா,
தாம் இத்தேர்தலில் வெற்றி பெற்றால் சொந்த குடும்பமாக கருதும் உலு
கிளாங் தொகுதி மக்களுக்கு நிறைய சேவைகளைச் செய்ய தாம் தயாராக
உள்ளதாகச் சொன்னார்.
எதிர்த் தரப்பில் உள்ளவர்களைப் போல் நாம் இலவசமாகக் குடிநீர்
வழங்குவது போன்ற வாக்குறுதிகளை காப்பியடித்துக் கூறமாட்டோம்.
பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே இந்த இலவசக்
குடிநீர்த் திட்டத்தை நாம் அமல்படுத்தி விட்டோம் என்றார் அவர்.
உலு கிளாங் தொகுதியில் சிலாங்கூர் மாநில பெரிக்கத்தான் நேஷனல்
தலைவர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலியை ஜூவாய்ரியா
எதிர்கொள்கிறார்.








