SELANGOR

உலு கிளாங் தொகுதியில் மகளிர், இளைஞர்களை இலக்காகக் கொண்டு ஜூவாய்ரியா தீவிரப் பிரச்சாரம்

4 ஆகஸ்ட் 2023, 2:59 AM
உலு கிளாங் தொகுதியில் மகளிர், இளைஞர்களை இலக்காகக் கொண்டு ஜூவாய்ரியா தீவிரப் பிரச்சாரம்

உலு கிளாங், ஆக 4- மகளிர் மற்றும் இளைஞர்களை கூடுமானவரை

அணுகி அவர்களின் ஆதரவைப் பெறுவது உலு கிளாங் தொகுதிக்கான

பக்கத்தான் ஹராப்பான் வேட்பாரின் தேர்தல் பிரச்சாரப் பாணியாக உள்ளது.

உலு கிளாங் தொகுதியைப் பெறுத்த வரை இவ்விரு தரப்பினரே

வாக்காளர்களில் அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு இந்த

அணுகுமுறையைத் தாம் கடைபிடிப்பதாகத் தொகுதி வேட்பாளரான

ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி கூறினார்.

உலு கிளாங் தொகுயில் பெண்கள் 49 விழுக்காடாகவும் இளைஞர்கள் 47

விழுக்காடாகவும் உள்ளனர். பிரசாரக் கூட்டங்களை நடத்துவதை விட

அவர்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பதையே நான் அதிகம்

விரும்புகிறேன் என அவர் சொன்னார்; காரணம், தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கட்சி உறுப்பினர்கள்தான் அதிகம் வருகிறார்களே தவிர வாக்காளர்கள் அல்ல என்று அவர்

தெரிவித்தார்.

தாம் உலு கிளாங் தொகுதியைச் சேர்ந்தவராக இருந்த போதிலும்

பெரும்பாலான நேரத்தை புக்கிட் மெலாவத்தி தொகுதியிலே இதுநாள்

வரை செலவழித்து விட்டதாக அவர் கூறினார்.

இவ்விரு தொகுதிகளும் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானவை. அது

எனது தாயாரின் பூர்வீக இடம். இது நான் வளர்ந்து பெரியவள் ஆன

இடம் என அவர் மந்திரி புசாரின் அரசியல் செயலாளருமான அவர்

தெரிவித்தார்.

வட்டார மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக தொகுதியின் பல

இடங்களில் சேவை மையங்களைத் திறக்க தாம் திட்டமிட்டுள்ளதாக

ஜூவாய்ரியா முன்னதாக கூறியிருந்தார்.

எதிர்வரும் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் பெரிக்கத்தான்

நேஷனல் வேட்பாளரும் முன்னாள் மந்திரி புசாருமான டத்தோஸ்ரீ

முகமது அஸ்மின் அலியை எதிர்த்து ஜூவாய்ரியான இத்தொகுதியில்

போட்டியிடுகிறார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.