SELANGOR

கோ கேல் பேருந்து சேவைக்கான வழித்தட பெயர்கள் மாற்றம் கண்டுள்ளன

3 ஆகஸ்ட் 2023, 8:09 AM
கோ கேல் பேருந்து சேவைக்கான வழித்தட பெயர்கள் மாற்றம் கண்டுள்ளன

கோலாலம்பூர், ஆகஸ்ட் 3 - ஆகஸ்ட் 1 முதல் கோ கேல் (GOKL) பேருந்து சேவைக்கான வழித்தட பெயர்களை வண்ணங்களில் இருந்து எண்களாக கோலாலம்பூர் சிட்டி ஹால் (டிபிகேஎல்) மாற்றியுள்ளது.

வண்ணங்கள் சிக்கலானதாகவும் குழப்பமானதாகவும் காணப்பட்டதால், பயணிகள் நினைவில் வைத்துக் கொள்வதை எளிதாக்கும் வகையில் 14 வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என டிபிகேஎல் தெரிவித்தது.

"இருப்பினும், இந்த குழப்பத்தைத் தவிர்க்க பாதையின் பெயரின் முடிவில் வண்ணம் தக்கவைக்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டது.

``KLCC இலிருந்து புக்கிட் பிந்தாங் செல்லும் பாதையை உள்ளடக்கிய பச்சை லைன் கோ கேல் 01க்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும், ஊதா லைன் (பாசார் செனி ஹப் – புக்கிட் பிந்தாங்) கோ கேல் 02 ஆகவும்; சிவப்பு லைன் (தித்திவாங்சா ஹப் - கேஎல் சென்ட்ரல்) கோ கேல்  03 ஆகவும் மற்றும் நீல லைன் (தித்திவாங்சா ஹப் - புக்கிட் பிந்தாங்) கோ கேல் 04 ஆகவும் மாற்றப்பட்டது.

கூடுதலாக, ஆரஞ்சு லைன் (தித்திவாங்சா ஹப் – MINDEF) இப்போது கோ கேல் 05 என அழைக்கப்படுகிறது. தொடர்ந்து, இளஞ்சிவப்பு லைன் (பந்தாய் ரியா பிபிஆர் – யூனிவெர்சிட்டி LRT) கோ கேல் 6 ஆகவும்; தெர்க்கைஸ் லைன் (டத்தோ கெரமாட் எல்ஆர்டி - கெலும்புக் பம்பு செத்திவாங்சா) கோ கேல் 07 ஆகவும்; மெரூன் லைன் (கம்போங் பத்து LRT- சௌ கிட்) கோ கேல் 08 ஆகவும் மற்றும் பிரவுன் லைன் (ஸ்ரீ ராம்பை LRT – செக்‌ஷன் 10 வாங்சா மஜு) கோ கேல் 09 ஆகவும் மாற்றப்பட்டன.

பிற வழிகள் கிளி பச்சை லைன் (மாலூரி தெர்மினல் – பண்டார் ஸ்ரீ பெர்மைசூரி) கோ கேல் 10 ஆக மாற்றப்பட்டது.  சாம்பல் லைன் (மாலூரி எல்ஆர்டி – பண்டார் துன் ரசாக்) கோ கேல் 11 ஆகவும்; க்ரீம் லைன் (தாமான் ஃபடாசன் - ஸ்ரீ டெலிமா எம்ஆர்டி) கோ கேல் 12 ஆகவும் மெஜந்தா லைன் (ஜின்ஜாங் எம்ஆர்டி - MATRADE) கோ கேல் 13 ஆகவும் மாற்றம் கண்டுள்ளன. முஹிப்பா சமூக வளாகத்திலிருந்து பிங்கிரான் புக்கிட் ஜலீல் பிபிஆர் வரையிலான புதிய பாதை கோ கேல் 14 என அழைக்கப்படுகிறது.

எனவே, கோ கேல் பேருந்து பயனர்கள், பேருந்து சேவையின் சமீபத்திய தகவல் அல்லது அறிவிப்புகளுக்குக் கோ கேல் செயலியைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.