ஷா ஆலம், ஆகஸ்ட் 3: கிள்ளானில் உள்ள தாமான் ஸ்ரீ ஆண்டலாஸ் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களின் உரிமை தொடர்பான பிரச்சனை 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகின்றது. இவ்விவகாரம் கடந்த ஜூன் மாதம் வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டது.
159 தொகுதிகள் அல்லது 1,123 யூனிட்கள் சம்பந்தப்பட்ட உரிமைப் பிரச்சனை 2019 ஆம் ஆண்டு அவரிடம் சமர்ப்பிக்கப் பட்டதாகக் சுங்கை காண்டிஸ் தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் முகமட் ஜவாவி அஹ்மத் முக்னி கூறினார்.
கோவிட்-19 காரணமாக நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக இந்த பிரச்சனையை முழுமையாகத் தீர்க்க கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் எடுத்ததாக அவர் ஒப்புக் கொண்டார்.
அசல் கட்டிடத் திட்டம் அல்லது வடிவமைப்பு தொலைந்து போன நிலையில், அந்தப் பகுதியை உருவாக்கிய நிறுவனம் நொடித்துப் போனது, அதனால் அந்த திட்டத்தின் நகலை பெற முடியாமல் காலம் கடந்தது உட்பட பிற சவால்களை மாநில அரசின் எஸ்கோ தெரிவித்தது.
" இறுதியாக இந்த திட்ட ஆலோசக நிறுவனம் இந்த கட்டிடத்தை மீண்டும் வரைவதற்கு ஒரு கட்டிடக் கலைஞர் நிறுவனத்தை நியமித்தது.
"இந்த உரிமைகள் வெற்றிகரமாகப் பெறுவதை உறுதி செய்வதற்காக நான் 10க்கும் மேற்பட்ட ஒருங்கிணைப்பு கூட்டங்களில் (பல்வேறு ஏஜென்சிகளுடன்) கலந்து கொண்டேன்" என்று ஆகஸ்ட் 1 அன்று கூறினார்.
அங்கு வசிப்பவர்கள் ஜூன் 17 முதல் 52 தொகுதிகளை உள்ளடக்கிய கட்டங்களாக உரிமையைப் பெறுவார்கள், மீதமுள்ளவர்கள் ஒன்று முதல் இரண்டு மாதங்களில் அவற்றைப் பெறுவார்கள் என்று முகமட் ஜவாவி தெரிவித்தார்.
கிள்ளான் மாநகராட்சி மற்றும் கிள்ளான் நிலம் மற்றும் சுரங்க அலுவலகம் ஆகியவை அங்கு வசிப்பவர்கள் மற்றும் வணிக வளாகங்களின் உரிமையாளர்களுக்கு RM1 மில்லியனுக்கும் அதிகமான வரி தள்ளுபடி வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.








