கோம்பாக், ஆகஸ்ட் 3: டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்கள் செலாயாங் பாரு, பத்து கேவ்ஸ் உள்ள SDG மண்டபத்தை நேற்று திறந்து வைத்தார்.
கோம்பாக் மாவட்ட சமூகச் சேவை மற்றும் சமூக மேம்பாட்டு அமைப்பின் (PSPK) செயல்பாட்டு மையமாக மாறும் இந்த மண்டபத்தைச் சுற்றி அமிருடின் பார்வையிட்டார்.
அவர் சமூகச் சேவை மற்றும் சமூக மேம்பாட்டு அமைப்பைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளுடன் கலந்துரையாடினார். பிறகு, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து கைவினைப்பொருட்கள் தயாரிப்பதற்கான இடத்தைச் சுற்றிப்பார்த்தார்.
"இந்த சமூகச் சேவை மற்றும் சமூக மேம்பாட்டு அமைப்பின் நீண்ட காலமாக இங்கு உள்ளது. நான் பெருமைப்படுகிறேன், அவர்கள் நன்றாக வளர்ச்சியடைந்து SDG கான்செப்ட்டை நாங்கள் வழங்குவதைப் போலவே செயல் படுத்தி வருகிறார்கள்.
கோம்பாக் மாவட்ட சமூகச் சேவை மற்றும் சமூக மேம்பாட்டு அமைப்பு என்பது ஒரு அரசு சாரா அமைப்பாகும். இது ஒற்றைத் தாய்கள் உட்பட ஆதரவற்ற பெண்களுக்கு உதவியை வழங்குகிறது,
அவர்களுக்கு தையல் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து நினைவு பரிசுகளைத் தயாரித்தல் போன்ற பட்டறைகளை இலவசமாக வழங்குகிறது.








