SELANGOR

கோம்பாக் செத்தியா தொகுதியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் - பாரிசான் நேஷனல் வேட்பாளர்

3 ஆகஸ்ட் 2023, 5:57 AM
கோம்பாக் செத்தியா தொகுதியில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் - பாரிசான் நேஷனல் வேட்பாளர்

கோம்பாக், ஆகஸ்ட் 3: மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) கோம்பாக் செத்தியா தொகுதியில் வெற்றி பெற்றால், ஏழு பாரம்பரிய கிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதாகப் பாரிசான் நேஷனல் (பிஎன்) வேட்பாளர் உறுதியளித்துள்ளார்.

மேலும், டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியிடம் குறைந்த விலையில் வீடு கட்டும் திட்டம் குறித்து பேசுவதாக டத்தோ மெகாட் சுல்கர்னைன் ஓமர்டின் தெரிவித்தார்.

"இப்போதெல்லாம் இங்குள்ள பல இளைஞர்கள் குறிப்பாகத் திருமணத்திற்குப் பிறகு மலிவு விலையில் வீடு தேடுவதற்காக வேறு இடத்திற்குக் குடிபெயர்கிறார்கள், எனவே நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதிக மலிவு விலை வீடுகளிக்கு  போராடுவேன்.

"தற்போதைய மாநில அரசு தொடர்ந்து ஆட்சியில் இருந்தால், இந்த விஷயத்தை செயல்படுத்த முடியும் என்று நான் நம்புகிறேன், ஏனெனில் டத்தோ மந்திரி புசார் மக்களுக்கு உதவ உறுதியுடன் இருக்கிறார்," என்று அவர் கூறினார்.

சம்பந்தப்பட்ட கிராமங்கள் கம்போங் சுங்கை புசு, கம்போங் சுங்கை சின்சின் மற்றும் கம்போங் சங்கட் ஆகியவை ஆகும்.

இதற்கிடையில், கம்போங் தெங்கா லெம்பா மற்றும் கோம்பாக் ஜெயாவில் வெளி ஆட்களால் சட்டவிரோதமாகக் குப்பை கொட்டும் பிரச்சனையை தீர்க்க மாநிலப் பிஎன் இணைப்புக் குழுவின் தலைவர் உதவுவார்.

மாநில தேர்தலில் மெகாட் சுல்கர்னைன், முகமட் ஹில்மன் இடாம் (பெரிகத்தான் நேஷனல்) மற்றும் முகமட் சலீம் முகமட் அலி (பேபாஸ்) ஆகியோரை எதிர்கொள்வார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.