SELANGOR

பாரிசான் நேஷனல் (பிஎன்) வேட்பாளர் ஏழு திட்டங்களை அறிமுகப்படுத்தினார் - டெங்கில் தொகுதி

1 ஆகஸ்ட் 2023, 10:29 AM
பாரிசான் நேஷனல் (பிஎன்) வேட்பாளர் ஏழு திட்டங்களை அறிமுகப்படுத்தினார் - டெங்கில் தொகுதி

டெங்கில், ஆகஸ்ட் 1: டெங்கில் தொகுதியில் உள்ள மக்களின் நல்வாழ்வுக்காக பாரிசான் நேஷனல் (பிஎன்) வேட்பாளர் ஏழு திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

சுகாதாரம், உள்கட்டமைப்பு, மதம், கல்வி, விளையாட்டு, நலன் மற்றும் பொருளாதார ஆகியவை அதில் அடங்கும் என்று நூரஸ்லி கூறினார்.

"நான் எனது பகுதியில் உள்ள மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க விரும்புகிறேன்.

"இந்தச் சலுகை டெங்கிலில் உள்ள சமூகத்தின் தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யக் கூடியதாக இருப்பதை நான் காண்கிறேன், இந்த பகுதியை நாங்கள் மேம்படுத்த வேண்டும்," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

மாநில மற்றும் மத்திய அரசுகளுடன் இணைந்து வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது டெங்கில் மக்களுக்கு நன்மையை அளிக்கிறது என 45 வயதான அந்த வேட்பாளர் தெரிவித்தார்.

"எங்கள்  கொள்கைகள் மாநில நிர்வாகத்துடன் ஒத்துப்போவதால், இந்த பகுதியை நாங்கள் சிறப்பாக மேம்படுத்த முடியும், மேலும் இது குடியிருப்பாளர்களுக்கு நன்மை பயக்கும்," என்று அவர் கூறினார்.

மாநிலத் தேர்தலில் (PRN) அத்தொகுதியில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.