SELANGOR

982 ஆசிரியர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலக அதிகாரிகளுக்குச் சிறந்த சேவைக்கான விருது

1 ஆகஸ்ட் 2023, 7:37 AM
982 ஆசிரியர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலக அதிகாரிகளுக்குச் சிறந்த சேவைக்கான விருது

பெட்டாலிங், ஆகஸ்ட் 1: பெட்டாலிங் பெர்டானாவைச் சுற்றியுள்ள பள்ளிகளில் பணிபுரியும் மொத்தம் 982 ஆசிரியர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலக அதிகாரிகள் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த சேவைக்கான விருதை இன்று பெற்றனர்.

தேசத்தின் குழந்தைகளுக்குக் கல்வி கற்று தருவதில் அக்கறை கொண்ட குழுவை அங்கீகரிப்பதற்காகப் பூச்சோங்கில் உள்ள ஷின் செங் சீனத் தேசிய வகை பள்ளி மண்டபத்தில், டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இந்த விருதை வழங்கினார்.

அமிருடின் தனது உரையில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் பணியில் கல்வியாளர்கள் அளித்த அனைத்து முயற்சிகள், அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

"பெறுநர்கள் சாதாரணமாகத் தேர்வு செய்யப்படுவதில்லை, மாறாகப் பணியில் தீவிரம், சமூக ஈடுபாடு, அதிக நேர்மை மற்றும் முழு அர்ப்பணிப்பைக் காட்டுதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

"இந்த வெற்றி கல்வியாளர்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் ஊக்கமாகவும் அமையட்டும். மேலும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கட்டும்" என்று கூறி அவர் விழாவைத் தொடக்கி வைத்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.