உலு கிளாங், ஆக 1- உலு கிளாங் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி
பெறுவதற்கு டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலியை விட தமக்கு வாய்ப்பு
அதிகமாக உள்ளதாக அத்தொகுதிக்கான பக்கத்தான் ஹராப்பான்
வேட்பாளர் கூறுகிறார்.
தாம் உலு கிளாங் தொகுதியை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதோடு
புக்கிட் மெலாவத்தி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய போது
புரிந்த சாதனைகள் மக்கள் தம்மைத் தேர்ந்தெடுப்பதற்கு காரணமாக
விளங்குவதாக அவர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி கூறினார்.
புதிய வேட்பாளர் என்பதேயே நான் சாதகமான அம்சமாக கருதுகிறேன்.
மேலும் நான் இள வயது பெண். அவரை விட சுறுசுறுப்புடன்
பணியாற்றுவதற்குரிய சக்தி எனக்கு உள்ளது என்று நேற்று இங்கு
நடைபெற்ற ஊடகங்களுடனான கலந்துரையாடல் நிகழ்வின் போது அவர்
தெரிவித்தார்.
இதனிடையே, இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் இளைஞர்களுக்கு
மேலும் அதிகமான வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதில் தாம்
முனைப்பு காட்டவுள்ளதாக அவர் சொன்னார்.
மேலும் அதிகமான இளைஞர்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வாழ்க்கைத்
தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் எனத் தாம் விரும்புவதாக தொழில்
முனைவோருமான டத்தோ ஜஹாயா இப்ராஹிம் குறிப்பிட்டார்.
இளைஞர்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு ஏதுவாக அவர்களுக்கு
வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர நான் விரும்புகிறேன். அவர்கள்
விரும்பினால் வர்த்தகத்திற்கு தேவையான லைசென்ஸ் மற்றும் கேந்திர
முக்கியத்தும் வாய்ந்த இடத்தை அடையாளம் காணவும் நான் தயாராக
இருக்கிறேன் என்றார் அவர்.








