SELANGOR

சிலாங்கூர் மேரிடைம் கேட்வே விவகாரம் - அவதூறு பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - அமிருடின் வரவேற்பு

1 ஆகஸ்ட் 2023, 4:31 AM
சிலாங்கூர் மேரிடைம் கேட்வே விவகாரம் - அவதூறு பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - அமிருடின் வரவேற்பு

ஷா ஆலம், ஆக 1- சிலாங்கூர் மேரிடைம் கேட்வே (எஸ்.எம்.ஜி.) திட்டம்

தொடர்பில் அவதூறான கருத்துகளைப் பரப்பி வரும் தரப்பினருக்கு எதிராக

சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அத்திட்டத்தை அமல்படுத்தி வரும்

லண்டாசான் லுமாயான் சென். பெர்ஹாட் (எல்.எல்.எஸ்.பி.) எடுத்துள்ள

முடிவை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வரவேற்றுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் விரிவான விளக்கத்தை மாநில அரசு

சட்டமன்றத்தில் வழங்கியுள்ள போதிலும் சில தரப்பினர் முழுமையாக

ஆராயாமல் தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக அவர் சொன்னார்.

உண்மையில், இந்த விவகாரம் தொடர்பில் பொது மற்றும் அடிப்படை

வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம்

சட்டமன்றத்தில் பல முறை பதில் அளித்துள்ளார்.

அதனை தெரிந்து கொள்வதற்கு கூட அக்கறை இல்லாத சோம்பேறிகளாக அவர்கள்

இருக்கின்றனர். இதன் தொடர்பில் வழங்கப்பட்ட பதில் தொடர்பான

ஹாசார்ட் பிரதிதியைக்கூட அவர்கள் படிக்கவில்லை என்றார் அவர்.

இந்த விவகாரத்தை கையில் எடுக்க பெரிக்கத்தான் நேஷனல் தலைவர்கள்

கூட அஞ்சுவது போல் தோன்றுகிறது. அதனால்தான் இதனைச்

செய்வதற்கு வெளியிலிருந்து ஆட்களைக் கொண்டு வந்துள்ளனர் என்று

அவர் சொன்னார்.

நேற்று இங்குள்ள ராஜா மூடா மூசா மண்டபத்தில் பக்கத்தான் ஹராப்பான்

மற்றும் பாரிசான் நேஷனல் தேர்தல் கொள்கையறிக்கையை வெளியிட்டப்

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

வெளிநாட்டில் வசிக்கும் வலைப்பதிவாளர் ஒருவர் லண்டாசான்

லுமாயான் நிறுவனம் தொடர்பில் தமக்கும் மாநில அரசுக்கும் எதிராக

பொய்யான தகவலை வெளியிட்டுள்ளது குறித்து அமிருடின்

கருத்துரைத்தார்.

சுமார் 70 கோடி வெள்ளி மதிப்பிலான அந்த எஸ்.எம்.ஜி. திட்டம்

வெளிப்படையான டெண்டர் முறையின் கீழ் வழங்கப்படவில்லை என்று

அந்த வலைப்பதிவாளர் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.