உலு லங்காட், ஜூலை 31: மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) மீண்டும் வெற்றி பெற்றால், சுங்கை ரமால் தொகுதியில் பள்ளிகள் பற்றாக்குறை பிரச்சனைக்குத் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும்.
ஆலம் சாரி மற்றும் பாங்கி அவென்யூ ஆகிய இரண்டு இடங்களில் மக்கள் தொகை 10,000க்கும் அதிகமான இருப்பதனால் அங்கு கவனம் செலுத்த வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் மஸ்வான் ஜோஹர் கூறினார்.
இப்பிரச்சனையால் குடியிருப்பாளர்கள் வீட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள பள்ளிக்குத் தங்கள் குழந்தைகளை அனுப்ப வேண்டி உள்ளதாக தெரிவித்தார்.
"பள்ளியைக் கட்டுவதற்கு இடம் ஏற்கனவே உள்ளது. பள்ளியைக் கட்டுவதற்கு நிதி கல்வி அமைச்சகம் உடனடியாக வழங்குவதற்காகத் தொடர்ந்து முயற்சி செய்வோம்," என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், தொகுதியின் பிரதிநிதியாக ஆனதில் இருந்து பல பள்ளிகளின் பொதுவசதிகளை பழுதுபார்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் மொத்தம் RM250,000 செலவிடப்பட்டது மஸ்வான் கூறினார்.
ஆறாம் படிவ மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர்பவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்குவதற்காக அவர் கடந்த ஆண்டு முதல் சுமார் RM100,000 ஒதுக்கினார்.
மேலும், பெரிக்காத்தான் நேஷனலில் இருந்து முகமட் ஷஃபி நகா மற்றும் மஸ்வான் இடையே இருமுனைப் போட்டியைச் சுங்கை ரமால் தொகுதியில் நிலவுகிறது.
கடந்த தேர்தலில், மஸ்வான் 24,591 வாக்குகள் பெற்று பாஸ் கட்சியைச் சேர்ந்த நுஷி மஹ்போட்ஸ் மற்றும் அப்துட் ரஹீம் முகமட் அமீன் (பாரிசான் நேஷனல்) ஆகிய இரு வேட்பாளர்களைத் தோற்கடித்தார்.








