SELANGOR

மக்கள் நலன் காக்கும் கட்சிக்கு ஆதரவு அளியுங்கள்

31 ஜூலை 2023, 2:50 AM
மக்கள் நலன் காக்கும் கட்சிக்கு ஆதரவு அளியுங்கள்

கோம்பாக், ஜூலை 31: மாநிலத்தில்  நல்லிணக்கத்தை அச்சுறுத்தும் வெறுப்பு அரசியலை நிராகரித்து  மக்கள் நலன் காக்கும் கட்சிக்கு ஆதரவளிக்குமாறு சிலாங்கூர் வாக்காளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாநிலத்தின் மிக உயர்ந்த தலைமையை அவமதிக்கும் விவகாரத்தில் மக்களும் சோர்வடைந்துள்ளனர் என்று சிலாங்கூர் அம்னோ தொடர்பு வாரியத் தலைவர் டத்தோ மெகாட் சுல்கர்னைன் ஓமர்டின் வலியுறுத்தினார்.

“ஒரு இயக்கம் அல்லது கட்சியின்  கொள்கையானது மக்களுக்குச் சலுகைகளை வழங்க கூடியதாக, புத்திசாலித்தனமான கொள்கையாக இருக்க வேண்டும். அரசின் மிக உயர்ந்த தலைமையை அவமானப்படுத்தும் ஜோக்கர் களின் கதைகளையும், அவர்கள் தங்களை  பெரிய வல்லவர்களாக  எண்ணிக்கொண்டு  ஆசாமிகள் விடும் கதைகளை மக்கள் கேட்க விரும்பவில்லை.

"தீவிர வெறுப்பு அரசியலை சிலாங்கூரில் வேரூன்ற அனுமதிக்காதீர்கள் என்று அவர் நேற்றிரவு கூறினார்.

சிலாங்கூர் மக்களின் வாக்குகள் மாநிலத்தின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது என்று சுங்கை துவா தொகுதியில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய கோம்பாக் செத்தியா வேட்பாளர் விளக்கினார்.

"ஆகஸ்ட் 12 ஆம் தேதி வாக்களிப்பது மிகவும் முக்கியம், ஏனெனில், கொடுக்கப்படும் ஒரு வாக்கும் யார் வெற்றி அல்லது தோல்வி பெறுவர் என்பதை மட்டும் தீர்மானிக்கவில்லை மாறாக சிலாங்கூர் மக்களின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது," என்று அவர் கூறினார்.

சுயேச்சை வேட்பாளரான முகமட் சலீம் முகமட் அலியின் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் முஹம்மது ஹில்மன் இடாம் ஆகியோரை எதிர்த்து மெகாட் மும்முனைப் போட்டியை எதிர்கொள்கிறார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.