SELANGOR

அதிகாரப்பூர்வ வாகனங்கள் ஒப்படைப்பு

29 ஜூலை 2023, 8:57 AM
அதிகாரப்பூர்வ வாகனங்கள் ஒப்படைப்பு

ஷா ஆலம், ஜூலை 29: அரசு நிர்வாகக் கட்டிடத்தின் வளாகத்தில், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் (எம்எம்கேஎன்) அவர்களின் அதிகாரப்பூர்வ வாகனங்களை ஒப்படைத்தனர்.

டத்தோ மந்திரி புசார் அவர்கள் தனது பயன்பாட்டிலிருந்த தொயோத்தா கேம்ரி காரை மாநிலச் செயலாளர் டத்தோ ஹரிஸ் காசிமிடம் ஒப்படைத்து இந்நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து சிலாங்கூர் மாநிலச் சபாநாயகர் இங் சூயி லிம் உட்பட அனைவரும் தத்தம் கார்களை ஒப்படைத்தனர்.

நல்லாட்சியை சுட்டிக் காட்டுவதையும் நடைமுறைப் படுத்துவதையும் தவிர வேறு கருத்துகளைத் தவிர்ப்பதற்காகவே இந்த ஒப்படைப்பு நடவடிக்கை என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

"இது சட்டத்திற்கு எதிரானது இல்லை என்றாலும், நாங்கள் எதிர்மறையான கருத்துகளைத் தவிர்க்க விரும்புகிறோம். எனவே இன்று இந்த அதிகாரப்பூர்வ கார்களை நாங்கள் ஒப்படைக்கிறோம். ஆனால், சில சமயங்களில் அதிகாரப்பூர்வ நிகழ்வுகளுக்கு இதைப் பயன்படுத்தலாம் என்று நேற்று நடத்த நிகழ்வில் அவர் கூறினார்.

" இது ஒருமைப்பாட்டைப் பேணவும், நல்லாட்சிக்கு உத்தரவாதம் அளிக்கவும் முடியும்" என்று தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.