SELANGOR

சிலாங்கூர் மாநில தேர்தல் நிலவரங்கள் நேரடி ஒளிபரப்பு- மீடியா சிலாங்கூர் ஏற்பாடு

29 ஜூலை 2023, 3:59 AM
சிலாங்கூர் மாநில தேர்தல் நிலவரங்கள் நேரடி ஒளிபரப்பு- மீடியா சிலாங்கூர் ஏற்பாடு

ஷா ஆலம், ஜூ 29- சிலாங்கூர் மாநிலத் தேர்தல் தொடர்பான ஆகக்

கடைசி நிலவரங்களை மீடியா சிலாங்கூர் சென். பெர்ஹாட் (மீடியா

சிலாங்கூர்) தனது சிறப்பு அகப்பக்கம் வாயிலாக நேரடியாக ஒளிரப்பு

செய்யும்.

எதிர்வரும் ஆகஸ்டு 12ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள்

உள்பட மாநிலத்திலுள்ள அனைத்து தொகுதி நிலவரங்களும் இந்த

அகப்பக்கம் வாயிலாக உடனுக்குடன் வெளியிடப்பட்டும்

தேர்தல் நிலவரங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள விரும்புவோர்

என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம்.

இன்று நடைபெறும் வேட்பு மனுத்தாக்கலும் நேரடியாக ஒளிபரப்ப செய்யப்படவுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள 56 தொகுதிகளின் கள நிலவரங்கள், தரவுகள்

மற்றும் கட்சி தேர்தல் கொள்கையறிக்கைகள் ஆகியவையும் இந்த சிறப்பு

ஒளிபரப்பில் இடம் பெறும்.

அதோ மட்டுமின்றி, கருத்துக் கணிப்புகள், நடப்பு வேட்பாளர், வாக்காளர்

எண்ணிக்கை, இன விகிதாசாரம் மற்றும் தேர்தல் வரலாறு உள்ளிட்ட

அம்சங்களையும் இந்த அகப்பக்கம் உள்ளடக்கியிருக்கும்.

சிலாங்கூர் மந்திரி புசார் கழகத்தினால் (எம்.பி.ஐ.) உருவாக்கப்பட்ட இந்த

அகப்பக்கத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஜூலை

10ஆம் தேதி மீடியா சிலாங்கூர் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாகத்

தொடக்கி வைத்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.