SELANGOR

வணிக வளாகங்கள் தேசியக் கொடியை பறக்கவிட அழைப்பு - கிள்ளான் மாநகராட்சி

28 ஜூலை 2023, 9:35 AM
வணிக வளாகங்கள் தேசியக் கொடியை பறக்கவிட அழைப்பு - கிள்ளான் மாநகராட்சி

ஷா ஆலம், ஜூலை 28: இந்த ஆண்டு 66 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிள்ளான் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள வணிக வளாகங்கள் தேசியக் கொடியை பறக்கவிட அழைக்கப்படுகின்றன.

எம்.பி.கே அளவிலான தேசியக் கொடியை ஏற்றும் நிகழ்ச்சி ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளாட்சி தலைமையகத்தின் (பிபிடி) முகப்பில் நடைபெறும் என்று கிள்ளான் மாநகராட்சியின் தலைவர் கூறினார்.

"எனவே, தேசியக் கொடியை வணிக வளாகத்தில் பறக்க விடுவதன் மூலம் சுதந்திர மாதக் கொண்டாட்டங்கள் நடத்துவதற்கு அவைகளின் ஒத்துழைப்பையும் நான் எதிர்பார்க்கிறேன் ," என்று நோரைனி ரோஸ்லான் கூறினார்.

கிள்ளான் மாநகராட்சியின் மாதாந்திர நிறைவுக் கூட்டத்தில் பேசிய நோரைனி, கிள்ளானைச் சுற்றியுள்ள அனைத்து அரசு வளாகங்கள், வணிக மற்றும் தனியார் கட்டிடங்களில் தேசியக் கொடியை நிறுவுவதற்கான அறிவிப்புகளையும் எம் பி கே விநியோகித்ததாக கூறினார்.

ஜூலை 16 அன்று, தேசிய மாதம், தேசிய தினம் மற்றும் மலேசியா தினக் கொண்டாட்டத்தை மேலும் உயிர்ப்பித்து, நாட்டின் மீதான அன்பின் உணர்வைக் காட்டும் வகையில் தேசியக் கொடியைப் பறக்க விட அனைத்து தரப்பினருக்கும் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி அழைப்பு விடுத்தார்.

மேலும், இந்த நாட்டு மக்கள் எல்லா இடங்களிலும், குறிப்பாக குடியிருப்புகள், வணிக வளாகங்கள், அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் அனைத்திலும் தேசியக் கொடியைப் பெருமையுடன் பறக்கவிட வேண்டும் என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.