SELANGOR

ஷா ஆலம், செக்சன் 27இல் கோத்தா கெமுனிங் வேட்பாளருடன் அறிமுக நிகழ்வு

28 ஜூலை 2023, 9:20 AM
ஷா ஆலம், செக்சன் 27இல் கோத்தா கெமுனிங் வேட்பாளருடன் அறிமுக நிகழ்வு

ஷா ஆலம், ஜூலை 28- அடுத்த மாதம் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும்

மாநிலத் தேர்தலில் கோத்தா கெமுனிங் தொகுதியில் பக்கத்தான்

ஹராப்பான் சார்பில் களமிறங்கும் வேட்பாளரான எஸ்.பிரகாஷின் அறிமுக

நிகழ்வு இங்குள்ள செக்சன் 27இல் உள்ள டேவான் பூலாயில் நேற்று

நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கெஅடிலான் கட்சியின் தொகுதி பொறுப்பாளர்கள்,

கோத்தா கெமுனிங் தொகுதி வாக்களிப்பு மாவட்ட தலைவர், தேர்தல்

நடவடிக்கைக்குழு பொறுப்பாளர்கள் உள்பட சுமார் 70 பேர் கலந்து

கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தொகுதியின் புதிய வேட்பாளரான பிரகாஷ் கட்சியின்

பொறுப்பாளர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இந்த வேட்பாளர்

வெற்றியடைவதை உறுதி செய்வதில் தங்களின் முழு ஆதரவையும்

வழங்குவதாக கட்சியின் அனைத்து பொறுப்பாளர்களும் ஒருமித்த குரலில்

கூறினர்.

இத்தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் களமிறக்கப்பட்ட புதுமுகங்களில்

ஒருவராக பிரகாஷ் விளங்குகிறார். பக்கத்தான் கூட்டணியின்

கோட்டையாக விளங்கும் இந்த தொகுதியில் ஜசெகவை பிரதிநிதித்து

இத்தேர்தலில் இவர் போட்டியிடுகிறார்.

கடந்த 14வது பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி

சார்பில் போட்டியிட்ட வீ.கணபதிராவ் மிகப்பெரும்பான்மை வாக்குகளில்

இத்தொகுதியில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பித்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.