SELANGOR

சுபாங் ருமா சிலாங்கூர் கூ திட்டம் பொது வசதிகளைக் கொண்டிருக்கும்

28 ஜூலை 2023, 9:05 AM
சுபாங் ருமா சிலாங்கூர் கூ திட்டம் பொது வசதிகளைக் கொண்டிருக்கும்

சுபாங் ஜெயா, ஜூலை 28: சுபாங் USJ1 இல் உள்ள ருமா சிலாங்கூர் கூ ``Project Harmoni Apartments TWL`` திட்டம் சுமார் RM150,000 முதல் RM250,000 வரையில் மதிப்பிடப்பட்ட விலையில் 715 குடியிருப்புகளை வழங்குகிறது.

அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானத்தில் 15,000 மலிவு விலை வீடுகள் உள்ளடங்கியிருப்பதாகத TWL ஹோல்டிங் பெர்ஹாட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.

"அந்த 30 மாடி அபார்ட்மெண்டில், பிளாக் Aஇல் 900 சதுர அடி பரப்பளவில் 415  குடியிருப்புகளையும் அதே நேரத்தில் பிளாக் Bஇல் 800 சதுர அடியில் 70  குடியிருப்புகளையும் மற்றும் 900 சதுர அடியில் 230 குடியிருப்புகளையும் வழங்கப்படுகின்றன.

"குடியிருப்பவர்களின் வசதிக்காக பார்க்கிங் புளோக், தபால் பெட்டி அறைகள், சுராவ், பல்நோக்கு மண்டபம் மற்றும் மழலையர் பள்ளி போன்ற பொது வசதிகளும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன." என்று ஷெர்லி தான் லீ சின் கூறினார்.

இன்று நடைபெற்ற அடுக்குமாடி குடியிருப்புக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார். சிலாங்கூர் வீட்டுவசதி மற்றும் ரியல் எஸ்டேட் வாரியத்தின் (LPHS) நிர்வாக இயக்குநர் டத்தோ டாக்டர் ஜுஹாரி அஹ்மட் உடன், வீட்டுவசதி எஸ்கோ ரோட்சியா இஸ்மாயிலும் இவ்விழாவில் கலந்து கொண்டார்.

மலிவு விலையில்  நேர்த்தியாக கட்டப்படவுள்ள  குடியிருப்புகள் வழி , எதிர்காலத்தில் இந்த வீட்டுத் திட்டம் சமூகத்திற்கு பெரிதும் பயனளிக்கும் என்று தாம் நம்புவதாக ஷெர்லி மேலும் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.