SELANGOR

மெகா சாலை மேம்பாட்டு திட்டம் நான்கு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டன

27 ஜூலை 2023, 7:37 AM
மெகா சாலை மேம்பாட்டு திட்டம் நான்கு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டன

ஷா ஆலம், ஜூலை 27: கடந்த மே மாதம் முதல் மாநிலம் முழுவதும் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் மெகா சாலை மேம்பாட்டு திட்டத்தை நான்கு மாவட்டங்களில் உள்ள பல இடங்களில் இன்ஃப்ராசெல் நிறுவனம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

ஜாலான் எங்காங் தாமான் கெராமாட் (உலு கிள்ளாங்) மற்றும் ஜாலான் 1/3 பண்டார் டெக்னாலஜி காஜாங் (உலு லங்காட்) ஆகிய இடங்களிலும் சாலை மேம்பாடு பணி நடைபெற்றது.

இதற்கிடையில், ஜூலை 23 அன்று, ஜாலான் குஞ்சி ஆயர் கம்போங் ரந்தாவ் பஞ்சாங்கிலும் (கிள்ளான்) சாலை மேம்பாடு பணி மேற்கொள்ளப்பட்டது.

ஜூலை 9 அன்று, 94.9 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய ஒன்பது மாவட்டங்களில் உள்ள பெரியளவில் சேதமடைந்துள்ள சாலைகளை மேம்படுத்தும் பணிகள் 25 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக உள்கட்டமைப்பு துறை பொறுப்பு உறுப்பினர் இஷாம் ஹசிம்

தெரிவித்தார்.

உள்ளாட்சி சாலைகள், பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை மற்றும் மாவட்டம் உட்பட 118 சாலைகளை உள்ளடக்கிய இந்நடவடிக்கை திட்டமிட்டபடி இம்மாத இறுதிக்குள் மேம்பாட்டு பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலத்தின் சாலைகள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக RM50 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பெரிய அளவிலான திட்டம் இதுவாகும் என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.