SELANGOR

மாநில அரசால் மொத்தம் RM719 மில்லியன் செலவில் பழைய குழாய்களை மாற்றும் திட்டம்  

27 ஜூலை 2023, 6:41 AM
மாநில அரசால் மொத்தம் RM719 மில்லியன் செலவில் பழைய குழாய்களை மாற்றும் திட்டம்  

ஷா ஆலம், ஜூலை 27: சிலாங்கூர் முழுவதும் உள்ள பழைய குழாய்களை மக்களின் வசதிக்காக மாற்றுவதற்கு மாநில அரசால் மொத்தம் RM719 மில்லியன் செலவிடப்பட்டது.

பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின் போது 600 கிலோமீட்டருக்கும் அதிகமான பழைய குழாய்கள் மாற்றப்பட்டதாக டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

"பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகக் காலத்தில், மாற்றப்பட்ட மொத்த குழாய்களின் எண்ணிக்கை 615 கிமீ ஆகும். முந்தைய நிர்வாகத்தில் 213 கிமீ மட்டுமே மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது" என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையில் மிகவும் பழமையான குழாய்களை மாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கப் பட்டதாகக் கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கமளித்தார். ஆனால் அதிக செலவு காரணமாக சிறிது கால அவகாசம் எடுத்ததை மறுக்கவில்லை என்றார்.

சிலாங்கூரில் 30,000 கி.மீ குழாய்கள் இருப்பதாகவும் அதில் 6,000 கி.மீ தொலைவில் உடையவை உடனடியாக மாற்றப்பட வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார். இருப்பினும், அதிக செலவு காரணமாக இந்நடவடிக்கை கட்டம் கட்டமாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் அமிருடின் விளக்கினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.