SELANGOR

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியுடனான பொது உரையாடல் நிகழ்ச்சியில் 100 பேர் கலந்து கொண்டனர்

26 ஜூலை 2023, 10:31 AM
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியுடனான பொது உரையாடல் நிகழ்ச்சியில் 100 பேர் கலந்து கொண்டனர்

ஷா ஆலம், ஜூலை 26: செக்‌ஷன் 15யில் உள்ள டேவான் கரங்க்ராஃப்வில் நடைபெற்ற டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியுடனான பொது உரையாடல் நிகழ்ச்சியில் 100 பேர் கலந்து கொண்டனர்.

இரவு 8.30 முதல் 10 மணி வரை நடைபெற்ற இந்த அமர்வு பிரபல நடிகர் அசார் சுலைமான் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வருகையாளர்கள் எழுப்பிய பல்வேறு பிரச்சனைகளை உள்ளடக்கிய 10க்கும் மேற்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார் அமிருடின்.

முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான மாநில திட்டமிடல், உணவு விநியோக உத்தரவாதம், மலிவு விலையில் வீடுகள் மற்றும் இ-பங்கிலான் ஓட்டுனர்களின் நிலைமை ஆகியவை முன்னிலைப் படுத்தப்பட்ட சிக்கல்களில் அடங்கும்.

நாட்டிலுள்ள தற்போதைய பிரச்சனைகளை வெளிக்கொணர உள்ளூர் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்களை இடம்பெறச் செய்வதற்கு இது போன்ற நிகழ்ச்சிகள் பெரும்பாலும் தொடர்புடைய நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.