SELANGOR

சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தின் (பிகேஎன்எஸ்) சைபர் வெளி டிஸ்கவரி நிகழ்வில் பல்வேறு சுவாரசியமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு 

26 ஜூலை 2023, 6:41 AM
சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தின் (பிகேஎன்எஸ்) சைபர் வெளி டிஸ்கவரி நிகழ்வில் பல்வேறு சுவாரசியமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு 

ஷா ஆலம், ஜூலை 26: எதிர்வரும் சனிக்கிழமை அன்று, சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தின் (பிகேஎன்எஸ்) சைபர் வெளி டிஸ்கவரி நிகழ்வில் உள்நாட்டு கலைஞர்களான தோமோக், மஸ் மே மற்றும் ஷிஹா ஜிகிரின் நிகழ்ச்சியைக் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்ச்சி சனிக்கிழமை பிகேஎன்எஸ் பாங்கி காம்ப்ளக்ஸ் வளாகத்தில் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரையும் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அதன் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் மேலாளர் கூறினார்.

“மெக்லாரன் 570, ஆடி ஆர் 8, முஸ்டாங் உள்ளிட்ட 17 வாகனங்கள் இடம் பெறும் ‘சூப்பர் கார்’ கண்காட்சியைப் பொதுமக்கள் காணும் வாய்ப்பும் உள்ளது.

"நாங்கள் ரியல் எஸ்டேட் கண்காட்சிகள் மற்றும் வீட்டுக் கடன்கள் தொடர்பான இலவச ஆலோசனைகளையும்  ஆர்வமுள்ள வருகையாளர்களுக்கு  வழங்கவுள்ளோம்" என்று முஹம்மது சோப்ரி ஜைனல் ஆபிடின் தொடர்பு கொண்டபோது கூறினார்.

``அதிர்ஷ்டக் குலுக்கு மூலம் Yamaha LC V8`` மோட்டார் சைக்கிள், ஸ்மார்ட் கைப்பேசி, தொலைக்காட்சிகள் மற்றும் பல வடிவில் பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்பையும் வருகையாளர்கள் பெற்றுள்ளனர்.

பிகேஎன்எஸ் திட்டங்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, விற்பனை துறையை 03-5525 0300/0187 அல்லது புலனம் (010-928 0187) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் அல்லது http://www.pkns.gov.my ஐப் பார்வையிடவும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.