SELANGOR

கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பு (ECRL) திட்டத்தின் ஈடுபட்டுள்ள தாமான் சுங்கை சிரே இடிக்கப் படாது

24 ஜூலை 2023, 10:24 AM
கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பு (ECRL) திட்டத்தின் ஈடுபட்டுள்ள தாமான் சுங்கை சிரே இடிக்கப் படாது

அம்பாங் ஜெயா ஜூலை 24: கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பு (ECRL) திட்டத்தின் ஈடுபட்டுள்ளதாக கூறப்படும் தாமான் சுங்கை சிரே, கிள்ளான் மீது இடிப்பு அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

2025 ஆம் ஆண்டு தொடங்கும் கட்டுமானப் பணிகளை பற்றி தொடர்ந்து டெவலப்பர்களுடனான கலந்துரையாடல்கள் இன்னும் நடந்து வருகின்றன என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கினார்.

"இது எதிர்காலத்தில் இடிப்பு செய்யப்படாது. உண்மை நிலை எது என்பதை மாநில அரசு கண்டறிய வேண்டும்.

“தற்போதைக்கு அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், எதிர்க்கட்சித் தலைவருக்கு இந்த தகவல் பற்றி முன்பே தெரிந்துள்ளது.  ஒருவேளை அவர் ஜின்களிடமிருந்து பெற்ற தகவலாக இருக்கலாம், ”என்று அவர் கூறினார்.

இன்று தாமான் கெராமட் எம்பிஏஜே மண்டபத்தில் 46 குடியிருப்பாளர்களுக்கு நில உரிமை கடிதத்தை (அறிவிப்பு 5 ஏ) வழங்கிய பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

பிப்ரவரி 18 அன்று, போர்ட் கிள்ளானில் பாதிக்கப்பட்ட 89 குடியிருப்பாளர்களின் நலனை பாதுகாக்கவும் அமிருடின் உறுதியளித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.