SELANGOR

புதிய அரசாங்கத்தை நிர்ணயிப்பதில் இளைஞர்கள் சிறந்த முடிவை எடுக்க வேண்டும் – மந்திரி புசார்

24 ஜூலை 2023, 9:38 AM
புதிய அரசாங்கத்தை நிர்ணயிப்பதில் இளைஞர்கள் சிறந்த முடிவை எடுக்க வேண்டும் – மந்திரி புசார்

கோம்பாக், ஜூலை 24: மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) நாட்டிற்கு ஸ்திரத்தன்மையை உருவாக்கக்கூடிய புதிய அரசாங்கத்தை நிர்ணயிப்பதில் இளைஞர்கள் சிறந்த முடிவை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த 50 ஆண்டுகளுக்கு, நாட்டின் அரசியலில் புதிய அத்தியாயத்தை வாக்குப்பதிவு நாள் தீர்மானிக்கும் என்று சிலாங்கூர் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

"இளைஞர்களுக்கான அழைப்பு ஒரு கட்சியைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல, வாக்களிக்கவும், அவர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கவும், நாட்டில் ஸ்திரத்தன்மையை உருவாக்கக்கூடிய ஒரு கட்சியைத் தேர்ந்தெடுப்பதும் ஆகும்.

“இன்று நாம் காணும் மலேசிய அரசியலின் புதிய அத்தியாயம் அடுத்த 30 முதல் 50 ஆண்டுகளுக்கு நிஜமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

" முன்பு பிஎன் (பாரிசான் நேஷனல்) 14 கட்சிகளைக் கொண்டிருந்தது, இப்போது ஒற்றுமை அரசாங்கத்தில் 19 கட்சிகள் உள்ளன (ஹரப்பான், டிஏபி, அமானா, பிஎன் மற்றும் பிற)," என்று அவர் நேற்றிரவு இங்குள்ள பத்து கேவ்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறு கூறினார்.

ஒற்றுமை அரசாங்கம் அனைத்து இனங்களையும் பிரதிநிதிக்கிறது என்றும், நாட்டை மீட்டெடுக்க அரசியலமைப்பின் கீழ் அதன் உருவாக்கம் தெளிவாக உருவாக்கப் பட்டது என்றும் அமிருடின் கூறினார்.

நாடு சுதந்திரம் பெற்ற போது  நாம்  ஒரு பெரிய கூட்டு, வெற்றி பெற்றோம்! இன்றும் நாம் பெரிய கூட்டு   அதுவே நமக்கு முதல் கட்ட வெற்றி ! என்றார் அவர்.

ஆகஸ்ட் 12 அன்று சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, திரங்கானு மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.