SELANGOR

மலிவு விற்பனையில் 5,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பயனடைந்துள்ளனர் - சுபாங் ஜெயா தொகுதி

23 ஜூலை 2023, 11:01 AM
மலிவு விற்பனையில் 5,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பயனடைந்துள்ளனர் - சுபாங் ஜெயா தொகுதி

சுபாங் ஜெயா, ஜூலை 23: சுபாங் ஜெயா தொகுதியைச் சுற்றியுள்ள 5,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் மலிவு விற்பனையில் 10க்கும் மேற்பட்ட அடிப்படை பொருட்களை வாங்கும் வாய்ப்பு பெற்றனர்.

"இன்று மாநில அரசுடன் இணைந்து நடத்தப்படும் இந் நிகழ்ச்சி மக்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு உதவ தொடர்ந்து பாடுபடுவோம்," என்று அத்தொகுதியின் நடப்பு உறுப்பினரான மிஷால் இங் அவரை சந்தித்தபோது கூறினார்.

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சின் ஒத்துழைப்புடன் ஜெலாஜா எஹ்சான் ரக்யாட் என முன்னர் அறியப்பட்ட இத்திட்டம் எதிர்வரும் டிசம்பர் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் பொதுமக்களுக்குச் சுமார் RM18 மில்லியன் சேமிப்பை வழங்கியதாகவும், விற்பனை மதிப்பை RM37 மில்லியன் பதிவு செய்ததாகவும் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.