SELANGOR

மதிப்பீட்டு வரி செலுத்தி அதிர்ஷ்டக் குலுக்கில் வெ.300,000 வரை வெல்ல அம்பாங் ஜெயாவாசிகளுக்கு வாய்ப்பு

21 ஜூலை 2023, 10:14 AM
மதிப்பீட்டு வரி செலுத்தி அதிர்ஷ்டக் குலுக்கில் வெ.300,000 வரை வெல்ல அம்பாங் ஜெயாவாசிகளுக்கு வாய்ப்பு

ஷா ஆலம், ஜூலை 21- மதிப்பீட்டு வரியை உடனடியாகச் செலுத்துவதன்

மூலம் அதிர்ஷ்டக் குலுக்கில் பங்கு பெற்று கவர்ச்சிகரமான பரிசுகளை

வெல்லும்படி சொத்து உரிமையாளர்களை அம்பாங் ஜெயா நகராண்மைக்

கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஜூலை முதல் தேதி தொடங்கி ஆகஸ்டு 31ஆம் தேதிக்குள் வரியைச்

செலுத்தியவர்கள் வரும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான

இரண்டாம் தவணைக்கான அதிர்ஷ்டக்குலுக்கில் பங்கு கொள்ளத் தகுதி

பெற்றுள்ளனர் என்று நகராண்மைக் கழகம் கூறியது.

எம்.பி.ஏ.ஜே, மக்கள்மயத் திட்டத்தின் கீழ் இந்த அதிர்ஷ்டக் குலுக்கல்

நிகழ்வை நகராண்மைக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த அதிர்ஷ்டக்

குலுக்கலில் 300,000 வெள்ளி மதிப்புள்ள 112 மாதாந்திர பரிசுகளும் நான்கு

முதன்மைப் பரிசுகளும் வெற்றியாளர்களுக்குக் காத்திருக்கின்றன.

கடந்த மார்ச் முதல் ஜூன் வரை நடைபெற்ற முதலாம் தவணைக்கான

குலுக்கலின் போது 58 வரி செலுத்துவோர் வெற்றியாளர்களாகத்

தேர்ந்தெடுக்கப்பட்டனர் என நகராண்மைக் கழகம் கூறியது.

இந்த முதலாம் தவணைக்கான அதிர்ஷ்டக்குலுக்கின் வெற்றியாளர்களுக்குப்

பரிசு வழங்கும் நிகழ்வு வீடமைப்பு மற்றும் நகர்ப்புற நல்வாழ்வுத்

துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில்

தலைமையில் இம்மாதம் 15ஆம் தேதி நடைபெற்றது.

இந்தப் அதிர்ஷ்டக்குலுக்கில் மசூட் சுக்கிமி மற்றும் கீ பாக் லுன்

ஆகியோர் மோட்டார் சைக்கிளைப் பரிசாக வென்றனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.